Tuesday, November 17, 2020

திருமலையில் முதல்வர் வரவேற்பில் சர்ச்சை.

 ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்த தமிழக முதல்வர், இ.பி.எஸ்.,சை, போலீஸ் அதிகாரியை வைத்து, தேவஸ்தான நிர்வாகம் வரவேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  திருமலையில் முதல்வர் வரவேற்பில் சர்ச்சை


ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலைக்கு வரும், மாநில முதல்வர்கள் அனைவரையும், தேவஸ்தான செயல் அதிகாரிகள் அல்லது அறங்காவலர் குழு தலைவர் மலர்ச்செண்டு அளித்து, நேரடியாக வரவேற்பது வழக்கம்.இந்நிலையில், ஏழுமலையானை தரிசிக்க, நேற்று மாலை குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்த தமிழக முதல்வர், இ.பி.எஸ்.,சை, திருமலையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனிராமய்யா, மலர்ச்செண்டு அளித்து வரவேற்றார்.ஆந்திராவை சேர்ந்த சிறிய அதிகாரிகள் வந்தாலும், நேரடியாக வரவேற்கும் தேவஸ்தான அதிகாரிகள், தேவஸ்தானத்திற்கு தொடர்பில்லாத போலீசார் மூலம், தமிழக முதல்வரை வரவேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த ஒரு, எம்.எல்.ஏ.,விற்கு அளிக்கப்படும் மரியாதையை கூட, ஒரு மாநில முதல்வருக்கு அளிக்க தேவஸ்தானம் மறுத்து உள்ளது. தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் உள்ளூரில் இருக்கும் நேரத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி கூறியதாவது:திருமலைக்கு வரும் மாநில முதல்வர்களை, தேவஸ்தான செயல் அதிகாரிகள் வரவேற்க வேண்டியது கட்டாயம். தமிழக முதல்வருக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.




'தடையின்றி வேல் யாத்திரை'



தமிழக, பா.ஜ., தலைவர் முருகன், திருமலை ஏழுமலையானை தரிசித்தார். தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம், லட்டு, வடை, திருவுருப்படம் அளித்தனர்.முருகன் கூறுகையில், ''வெற்றிவேல் யாத்திரை தடையின்றி நடக்க வேண்டும் என, வேண்டினேன்,'' என்றார். அரசியல் கட்சிகளின் மாநில தலைவர்களை வரவேற்பதற்கு, திருமலை தேவஸ்தானத்தில் விதிமுறைகள் எதுவும் இல்லை. கட்சிகளின் தலைவர்கள் வரும்போது, அவர்களுக்கு, தேவஸ்தானத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படாது. இதனால், தமிழக, பா.ஜ., தலைவர் முருகனுக்கு, தேவஸ்தானம் சார்பில், திருமலையில் நேற்று வரவேற்பு அளிக்கப்படவில்லை.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...