Monday, November 30, 2020

பொருளாதாரம் என்பது என்ன பெரிய ராக்கெட் சைன்ஸா?

 இந்தியாவின் பொருளாதாரம் இன்று வீழ்கிறது, அது என்னவோ கத்திரிக்காய் வியாபரம் போல் தெருவில் போறவன், வர்றவன் எல்லாம் தன் பங்குக்கு கொஞ்சம் வீசி விட்டு செல்வதும், அதன் அடிப்படையே தெரியாமல் மீடியாக்களில் விவாதிப்பதும் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. அதனால் அதன் அடிப்படையை நாம் புரிந்து கொண்டால் அடுத்து பேசும் அறைவேக்காடுகளை கேள்வி கேட்க, அல்லது குறைந்தபட்சம் அதை சீரியஸாக கேட்காமல் போக உதவும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். இதை எழுதும்போது முதல் முறையாக நான் படித்த Finance மூன்று காசுக்கு உதவியது.

ஏதொன்றையும் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அதை சிறிய அளவில், நமக்கு தெரிந்த வடிவில் ஒரு மினியேச்சர் போல பார்த்தால் எளிதில் புரியும். அதை நாம் செய்தால் எதுவும் ராக்கெட் சைன்ஸ் அல்ல..
சிறுக்கிணர் எனும் சிற்றூர், அங்கு 50 குடும்பங்களே வாழ்கின்றனர். அங்குள்ள பெரும்பான்மையான் நிழங்களை வைத்திருப்பவர் 5 பெரிய மிராசுதாரர்கள். அவர்கள் விவசாயம் செய்வதற்கு ஏற்ப விவசாய கூலி ஆட்கள் தேவை. மீதி 10 பேர் சிறு விவசாயிகள், அவர்கள் நிலத்தில் வேலை இருந்தால் செய்வார்கள், இல்லையெனில் அந்த 5 ல் ஒரு விவசாயியிடம் வேலை செய்வார்கள். அதைப்போல மேலும் 25 குடும்பங்கள் அந்த 5 மிராசுதாரர்களிடம் வேலை செய்வார்கள். மீதி 10 குடும்பம் சலவை, முடி திருத்தும், செருப்பு தைக்கும், வீடு கட்டும் தொழிலாளிகள்.
அந்த 5 மிராசுதாரர்கள் தங்களின் தோட்டத்தில் 10 ஏக்கர் வீதம் சோளம் பயிரிடுவார்கள். அது அந்த கிராமத்தின் முக்கிய உணவு தானியம். அதை எடுத்துவிட்டு புகையிலை பயிர் செய்வார்கள். கிராமத்திற்கு தேவையான சோளத்தை வைத்துக்கொண்டு மீதியை அருகில் உள்ள சந்தையில் விற்பார்கள். அதே சமயம் எல்லா புகையிலையும் வெளியே சென்று விற்று பணம் 💰 சம்பாதிப்பார்கள்.
அவர்கள் தோட்டத்தில் வேலை இருக்கும்போது அங்கு வேலை செய்து ஒரு பங்கு சோளம் உணவுக்காகவும், மறு பங்கு பணமாகவும் கூலியாக பெறுவர். அந்த பணத்தை கொண்டு சிறு விவசாயிகளிடம் இருந்து காய், கறி, கனிகள் வாங்கி உணவிற்காக பயன்படுத்துவார்கள்.
அதை தவிர மீதி இருக்கும் பணத்தை மற்ற தொழிலாளிகளுக்கு சலவை செய்வதற்கும், முடி வெட்ட, செருப்பு தைக்க கொடுப்பார்கள்.
அவர்கள் உணவு, காய்கறி வாங்க மிராசுகளிடமும், சிறு விவசாயிகளிடமும பணம் கொடுத்து வாங்குவர். இப்போதைக்கு ஒரு கிலோ சோளம் ₹10 என்றும் காய்கறிகள் கிலோ ₹15 என்றும், கனிகள் ₹20 என்றும் வைத்துக்கொள்வோம்.
இந்த வகையில் வெளியில் இருந்து புகையிலை விற்ற பணம் மிராசுகளிடம் மட்டும் இல்லாமல் எல்லோரிடமும் கைமாறுவதே பொருளாதாரம். அதை பிரித்து பொருள் + ஆதாரம் என்று சொல்லலாம். அதாவது பொருளை வாங்கு ஆதாரமான பணம் 💰 என்பதே அதன் அர்த்த்ம்.
இப்போது வெளியில் புகையிலைக்கு டிமாண்ட் கூடுகிறது. அப்படியெனில் மிராசுகள் வழக்கத்திற்கு அதிகமான நிலத்தில் புகையிலை பயிர் செய்வார்கள் எனில், அவர்களுக்கு கூடுதல் விவசாய கூலி ஆட்கள் தேவை அல்லது அவர்கள் அதிக நேரம் உழைக்க வேண்டும். எனவே அவர்களுக்கு அதிக கூலி கிடைக்கும். அதையும் மீறி தேவைப்படும்போது கூலி தொழிலாளி தன் ஒரு நாள் கூலியை ₹100 இருந்து ₹125 உயர்த்துவான்.
இப்போது அவர்கள் கையில் அதிக பணம் இருக்கும். எல்லோரும் அதிக சோளம், காய்கறி வாங்குவர். ஆனால் காய்கறி உற்பத்தி அதே அளவில் தான் இருக்கும். இப்போது தேவை அதிகரிப்பதால்
ஒரு கிலோ சோளம் ₹15 என்றும் காய்கறிகள் கிலோ ₹20 என்றும், கனிகள் ₹25 என்று உயறும். அதே நபர்கள், அதே காய்கறி ஆனால் வெளியில் இருந்து பணம் அதிகம் வந்ததால் உயர்ந்து விட்டது. அதைத்தான் பண வீக்கம் (inflation) என்று பொருளாதாரத்தில் சொல்வார்கள்.
சரி ஆட்சி மாறுகிறது, காட்சியும் மாறுகிறது. புதிதாக வந்த அரசு புகையிலை பயன்படுத்துவதை தடை செய்கிறது. எனவே விவசாயிகள் புகையிலை பயிர் செய்வதை நிறுத்துகிறார்கள். அதனால் இப்போது அந்த மிராசு மூலம் வெளியில் இருந்து பணம் வருவது குறைகிறது. எனில் விவசாயம் செய்யும் நில அளவை குறைக்கிறார்கள். இப்போது நிறைய பேர் வேலை செய்ய இருந்தாலும், வேலை இல்லாததால் ₹125 கூலியை ₹80 தான் கொடுப்பேன் என்று சொன்னாலும் அதற்கும் ஆட்கள் வருகிறார்கள். இப்போது பண புழக்கம் தொழிலாளிகளிசம் குறைவதால் காய்கறி வாங்க ஆள் இல்லை, அதன் விலையும் குறைகிறது. சலவை செய்வது, முடி திருத்துவது, செருப்பு தைப்பது எல்லாம் குறைய இப்போது தேவை குறைவதால்
ஒரு கிலோ சோளம் ₹8 என்றும் காய்கறிகள் கிலோ ₹10 என்றும், கனிகள் ₹15 என்று குறையும். அதே நபர்கள், அதே காய்கறி ஆனால் வெளியில் இருந்து பணம் குறைவாக வந்ததால் தாழ்ந்துவிட்டது. அதைத்தான் பண இறக்கம் (-ve inflation) என்று பொருளாதாரத்தில் சொல்வார்கள்.
இப்படி பணம் 💰 கைமாறுவதும், அதன் அளவுகளுக்கு ஏற்ப அதன் விலை ஏறுவதோ அல்லது குறைவதோ நடக்கும். விலை ஏறும்போது அதிக பண பரிமாற்றம் நடக்கும். அப்போது பொருளாதாரம் வளர்கிற்து என்றும், பரிமாற்றம் குறையும்போது பொருளாதாரம் வீழ்கிறது என்று சொல்வார்கள்.
இப்போது இந்திய நாட்டின் பொருளாதாரத்தையும், அதை பற்றி வாய் கிழிய பேசுபவர்களிடமும் இதைப்பற்றி கேட்டுப்பாருங்கள், அவர்கள் உங்களிடம் பேசுவதை குறைத்துக் கொள்வார்கள்..
இது உங்களுக்கு எளிதாக புரிந்து பயனுள்ளதாக இருந்தால் கமெண்ட் செய்யுங்கள். அதற்கேற்ப அரசாங்கம் என்பது இங்கே எப்படி வருகிறது என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.
ஆதாரத்துடன் பொருளாதாரம்.
எப்படி படித்த முட்டாள்களால் பொருளாதாரம் பாழ்படுகிறது என்று தெரிந்துகொள்ள

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...