Saturday, April 30, 2022

சொந்தகாரங்க வீட்டுக்கு விருந்துக்கு போகும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள்.......

 சாப்பாடு வெச்சாச்சு வாங்க..ன்னு சொன்னா லபக்குன்னு... எந்திருச்சு ஓட கூடாது....

.
எப்போதும் தனியா உக்காந்து சாப்பிட கூடாது எல்லாத்தையும் நம்மாலே காலி பண்ணுனத கண்டு புடிசுருவாங்க....
.
மொத ரவுண்டு சாப்பாடு வைக்க ஆரம்பிக்கும் போதே கொஞ்சமா...கொஞ்சமா ன்னு சொல்லிட்டே இருக்கனும்..அப்பத்தான் அள்ளி வெச்சிட்டே இருப்பாங்க.....
.
முடிஞ்ச அளவு முட்டை ...அப்பளத்தை முதல்லையே திங்க கூடாது..அப்புறம் நெறையா சாப்புட முடியாது....
.
விக்கல் வந்தா மட்டும் தண்ணி குடிக்கலாம்..இல்லாட்டி தண்ணி அறவே உடம்புல சேத்துக்க கூடாது நம்ம வந்த வேலை..திருப்தி அடையாம போயிரும்.....
.
பக்கத்துல சாப்புடுரவர விட வேகமா அள்ளி உள்ள உட்டுட்டே இருக்கனும்..அவருக்கு முன்னாலையே எலை ய மடிச்சிரனும...அப்பத்தான் நம்ம நெறைய சாப்புட்ட சந்தேகம் வராது..
.
.
இந்த ரூல்ச பாலோ பண்ணுனா விருந்து ஒரு
அருமையான
விஷயம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...