Monday, April 18, 2022

தி.மு.க.,வினர் வேடிக்கைகள் தொடரும்!

 வடமாநில அரசியல்வாதிகள் என்ன தான் விரோதமாக இருந்தாலும், வாலி- - சுக்ரீவன் மாதிரி எதிரிகளாக இருந்தாலும், பொது நிகழ்ச்சிகளில் எந்தவிதமான விகல்பமும், சங்கோஜமும் இன்றி பங்கேற்பர்; நாகரிகமாக நடந்து கொள்வர். தென்மாநில அரசியல்வாதிகளோ, நாகரிகம் என்றால், கிலோ என்ன விலை, எங்கே கிடைக்கும் என்று கேட்பர்.


இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தன்று, கவர்னர் ரவி, ஏற்றத்தாழ்வு பாராமல் சமத்துவ நோக்கோடு, தமிழக அமைச்சர்களுக்கும், பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், பங்கேற்கும்படி அழைப்பும் விடுத்திருந்தார். ஆனால், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட, 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காமல், ஓரங்கட்டி வைத்திருப்பதை காரணமாக காட்டி, அவர் அளித்த தேநீர் விருந்தை ஆளும் கட்சியினரும், அவர்களின் கூட்டணி கட்சியினரும் புறக்கணித்து விட்டனர்.

இவர்கள் புறக்கணித்ததால், ஒன்றும் கெட்டுப் போகவில்லை; தேநீர் விருந்தும் ரத்தாகவில்லை. பா.ஜ., - அ.தி.மு.க., - பா.ம.க., - த.மா.க.,வினர் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். கவர்னராக இருப்பவர், ஆளும் கட்சியின் ஏவலாள் அல்ல. அவருக்கு என பல அதிகாரங்கள் அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ளன. இருந்தாலும், தமிழக ஆட்சியாளர்கள், திரைப்படங்களில் வில்லனின் மிரட்டலுக்கு அஞ்சி நடுங்கி, அவன் காட்டும் பத்திரங்களில், சிலர் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போடுவது போல, இவர்கள் அனுப்பும் மசோதாக்களை படித்து பார்க்காமலேயே, கவர்னர் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.


latest tamil news


அப்படித் தான், 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவிலும் கையெழுத்திட வேண்டும் என நினைக்கின்றனர். 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவால், மருத்துவ கல்லுாரிகளை நடத்தி கொண்டிருக்கும் கழக பிரமுகர்களுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் தான் ஆதாயமே தவிர, மருத்துவம் படிக்க விழையும் மாணவர்களுக்கு தம்பிடி பிரயோஜனமும் கிடையாது. இதை கவர்னர் நன்கு அறிந்துள்ளதால், ஆளும் கட்சியினர் ஒரு முறை அல்ல; இரு முறை அல்ல; ஓராயிரம் முறை, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பினாலும், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்.

தி.மு.க., துவக்கப்பட்ட போது, 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு!' என்று, அக்கட்சியினர் கூவிக் கொண்டிருந்தனர். 'இனி, திராவிட நாடு பற்றி பேசினால், பேசுவோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்' என, மத்திய அரசு அறிவித்ததும், பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டனர். திராவிட நாடு கோரிக்கையை துாக்கி கடாசி, அதற்கு சமாதியும் கட்டி விட்டனர். அதுபோல, நீட் தேர்வு விலக்கு மசோதா விஷயத்திலும், மத்திய அரசு ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்காத வரை, இவர்கள் இப்படித் தான் வேடிக்கை காட்டிக் கொண்டிருப்பர். நாமும், அதை பார்த்துக் கொண்டு தான் இருப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...