Wednesday, April 20, 2022

உலகமே திமிரில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது...

 ”இசையமைப்பாளராக ஆகலன்னா வேற என்ன வேலை பார்த்திருப்பீங்க சார்?” ஒருவர் கேட்கிறார்.

”நான் இசையமைப்பளாராக ஆகாமல் வேறு எந்த வேலை பார்த்தால் உனக்கு பிடிக்கும் நீயே சொல்லு”
“இல்ல சார் நீங்க இசையமைப்பாளராக இருக்கிறதுதான் நல்லாயிருக்கு”
“அப்புறம் ஏன் என்னப் பாத்து இந்த கேள்விய கேட்ட” என்கிறார் இளையராஜா...
இது அழகான intellectual பதில்.. இசையை தவிர வேறொன்றையும் என்னால் கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை என்பதை சொல்லும் பதில்...
டக்கென்று பார்க்க கொஞ்சம் திமிரான பதிலாக தோன்றும்...
மாபெரும் திறமைசாலிகளுக்கு நிச்சயம் திமிர் இருக்க வேண்டும்...
அந்த திமிரை தக்கவைத்துக் கொள்ள அவர்கள் உழைப்பதும், திறமையை வளர்த்துக் கொள்வதும், அவர்கள் திறமையை வளர்த்துக் கொண்டு சாதிப்பதால் திமிர் வளர்வதும் மாற்றி மாற்றி நடக்கும் போது மட்டுமே நல்ல படைப்புகள் கிடைக்கும்.
"Sehwag is licensed to thrill" என்றார் தோணி... சேவாக்குக்கு அடிச்சி ஆட லைசென்ஸ் இருக்குய்யா.. அவரு அப்படிதான் ஆடுவாரு என்றார் தோணி.
அது போல இசைஞானி இளையராஜாவுக்கும் திமிராய் பேசுவதற்கான லைசன்ஸ் இருக்கிறது...
“எந்த பஸ்ஸ முதல்ல எடுப்பீங்க” என்றொரு கண்டக்டரிடம் கேட்டுப் பாருங்கள். அவர் சரியாக பதில் சொல்லமாட்டார்.
ஏனென்றால் அவருக்கு நம்மை விட ஒரு Information அதிகமா தெரியுமாம்...
அதனால் திமிராய் இருப்பாராம்.
உலகமே திமிரில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது...
ஆனால் நாம் அனைவரும் எப்படி திமிரே இல்லாதது மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறோம் பாருங்கள்.
சும்மா ஒருவனை தெரியாமல் மிதித்து விட்டால் ஒன்பது முறை
“சாரி சார் சாரி சார் தெரியாம பண்ணிட்டேன் சார்” என்று சொல்லி அவனை தொட்டுக் கும்பிட்டு, அசட்டு சிரிப்பு சிரித்து, ஏதோ பெரிய தப்பு செய்தவன் போல குற்ற உணர்வு கொள்ளும் அளவுக்கதிகமான கண்ணிய மொக்கை அளவுகோள் வைத்து
இளையராஜாவை அளக்கும் வரை
அவரை திட்டிக் கொண்டேதான் இருப்போம்...
தொண்டை வற்றும் வரை திட்டுங்க. Who cares 😎
Love you Raja
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...