Thursday, April 21, 2022

அடக்கி வாசிங்க... ஆட்டம் போடாதீங்க!

 கருத்து சுதந்திரம் பற்றி வாய்கிழிய பேசும் தமிழக அரசியல் கட்சிகள், தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது மட்டும், அதற்கு எதிராக செயல்படுவது வழக்கமாகி விட்டது. தவறுகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் மீது, கொலை வெறி தாக்குதல்கள் நடத்தி, அவர்களை மிரட்டி அடிபணிய வைக்க முற்படுவர். மான நஷ்ட வழக்கு என்ற பெயரில் எதிராளிகளை மடக்க நினைப்பர்.


சமீபத்தில், ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்த, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வோம் என, தி.மு.க., தரப்பில் கூறியதையும் நாம் அறிவோம். அதேநேரத்தில், இந்த ஆட்சியாளர்களை முந்தைய தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசி, துதி பாடினால், ஜால்ரா தட்டினால், அதை ஆனந்தமாக ரசிப்பர். இந்நிலையில், புத்தகம் ஒன்றுக்கு எழுதிய அணிந்துரையில், அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு, இசையமைப்பாளர் இளையராஜா தன் கருத்தை பதிவு செய்தார். அதற்காக அவரை தி.மு.க.,வினரும், அதன் கூட்டணி கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.


latest tamil news


இந்த எதிர்ப்பாளர்களுக்கு பதிலடியாக, 'பதவிக்காக நான் மோடியை புகழவில்லை. எனக்கு எந்த பதவியும் தேவையில்லை. என் கருத்தை திரும்ப பெற மாட்டேன்' என்று இளையராஜா கூறியதாக, அவரின் சகோதரர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில், மோடியை பலருக்கு பிடிக்கும். அந்த வகையில், இளையராஜாவுக்கு மோடியின் செயல்பாடுகள் பிடித்துள்ளன; அதனால், பாராட்டியுள்ளார்.DMK, MK Stalin, Stalin


ஸ்டாலினை காமராஜருடன் ஒப்பிட்டு, நெல்லை கண்ணன் பேசியதையும், கனிமொழியை வீரமங்கை வேலுநாச்சியாருடன் ஒப்பிட்டு சிலர் பேசியதையும் எதிர்த்து, பா.ஜ., உட்பட எந்தக் கட்சியினரும், கருத்துக் கூறவில்லை. அதுபோல, இளையராஜாவின் கருத்தையும், தி.மு.க., அனுதாபிகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, அதற்கு மாறாக விமர்சனம் செய்வது சரியல்ல.

இன்னும் நான்கு ஆண்டுகள் ஸ்டாலின் பதவியில் இருப்பார் என்பதால், அவரையும், அவரின் குடும்பத்தினரையும் மட்டுமே, தமிழகத்தில் உள்ளோர் புகழ்ந்து பேச வேண்டும்; மற்ற யாரையும் புகழ்ந்து பேசக்கூடாது என, தடை விதித்திருப்பது போல அல்லவா இருக்கிறது, தி.மு.க., அனுதாபிகளின் செயல்பாடு. கழக ஆட்சியாளர்களே... ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்... நீங்கள் மற்றவர்களின் கருத்து சுதந்திரத்தில் இப்போது தலையிட்டால், நான்கு ஆண்டுகள் முடிவில் உங்கள் ஆட்சியின் பியூசை பிடுங்க மக்கள் தயாராகி விடுவர்... ஜாக்கிரதை. அடக்கி வாசியுங்கள்... ஆட்டம் போடாதீங்க!


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...