Friday, April 22, 2022

நாக_லோகத்துடன் #தொடர்புடைய_கோயில்...

 பண்டைய காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் நமது பூமி 7 லோகங்களை கொண்டது என்றார்கள் அந்த 7- லோகத்தில் நாகலோகமும் ஒன்று.இது எந்தளவுக்கு உண்மை என நாம் நினைத்தாலும் அறிவியல் வளர்ச்சியில் வளர்ந்துவிட்ட மனிதனுக்கு கூட சில விசயங்கள் புரிபடவில்லை(விமானங்கள் காணாமல் போகுதல் உட்பட) என்பது உண்மையாகும்.

நம் தமிழகத்தில் நாகத்திற்கு என பல கோயில்கள் இருந்தாலும் அதைவிட அதிக சக்தி வாய்ந்த கோயில் ,இலங்கையில் ,யாழ்ப்பாண மாவட்டம் ,நயினார் தீவில் அமைந்துள்ள “நாக பூசணி அம்மன்”கோயில் கிட்டத்தட்ட 14000 வருங்கள் பழமையானது ஆகும்.
இந்த கோயில் நாகர்களால் கட்டப்பட்டது.நாகர்கள் என்பவர்கள் பணடைய தமிழர்களின் ஒரு பிரிவினர்தான் என வரலாற்று ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோயில் பல அற்புத ரகசியங்களை உள்ளடக்கியது அணுவில் இருந்து தோன்றி பரிமாண வளர்ச்சி அடைந்த முதல் இனம் தமிழனம் என சான்றுகள் கூறுகின்றன.இந்த கோயில் அமையும்போது நாகலோகத்து நாகர்களும் கூட இருந்து தமிழர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தார்களாம்
எத்தனையோ ரகசியங்களையும்,வரலாறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த கோயிலில் “நாக பூசணி அம்மனை வழிபட்டால்”நாக தோசங்கள்,கடுமையான “ராகு&கேது தோசங்கள்” முற்றிலும் விலகும்.
தோல் வியாதிகள்,விஷக்கடிகள்,திருமணத்தடைகள்,புத்திர தோஷங்கள் அனைத்தும் விலகி இன்பம் கிடைக்கும்.ஆன்மிக அன்பர்கள் நேரமும்,வாய்ப்பும் இருந்தால் அவசியம் “நயினார் தீவு நாக பூசணி அம்மனை” வணங்கிவிட்டு வாருங்கள் உங்கள் துன்பமெல்லாம் மறைந்து இன்பம் கிடைக்கும்...
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...