Sunday, January 15, 2023

மனித வாழ்க்கை ●

 ●30 வயதிற்கு பிறகு ஆண்களுக்கு பணம்தான் பெரிய பிரச்சினை, ராத்திரி எல்லாம் தூக்கம் இல்லாமல் தன்னுடைய குடும்பத்தை எப்படி வழி நடத்துவது என்று பல ஆண்கள் யோசித்து கொண்டுதான் இருக்கின்றனர்,

●40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ரெண்டுமே ஒன்றுதான்...
(குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க, அதிகமாக படிச்சவன் அடுத்து என்ன என்ற கணக்கில்தான் வாழ்கிறான்...)
●50 வயதிற்கு பிறகு, அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான்,
(எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், உடல் சோர்வு, நரை முடி முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள், வரத்தான் செய்யும்).
●60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாருமே ஒன்றுதான்,
(ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒன்றுதான், அவர்கள் வீட்டில் ஒரு செல்லாக்காசுதான்).
●70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, சிறிய வீடோ எல்லாமே ஒன்றுதான்,
(மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியாமை, கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).
●80 வயதிற்கு பிறகு, பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாருமே ஒன்றுதான்,
(வயசாடுச்சில... என்ற வார்த்தைதான் முதலில்... அதிகமா செலவழிக்கவும் முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும், எல்லாவற்றிற்கும் உடல் ஒத்துழைக்காது).
●90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாருமே ஒன்றுதான்,
(இருந்தால் என்ன, இறந்தால் என்ன, என்ற நிலைதான், ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).
●100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாமே ஒன்றுதான்,
(நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).
அதனால வாழ்க்கையை சுலபமாக கையாள கற்றுக்கொள்ளுங்க, நாம் 50/60 வயதிற்கு மேல் இருக்கப்போகிறோமா? என்பது எவராலும் கணிக்க இயலாதுதானே...
என்ன நம்மிடம் இருக்கிறதோ, அதை கொண்டு திருப்தி கொள்ளுங்கள், இல்லாததை நினைத்து வருத்தப்படுவதை விட்டுவிடுங்கள்,
இந்த நொடி இந்த நிமிடம் நமக்கானது என்று நினைத்து தினந்தோறும் பொழுதை தொடங்கிடுங்கள்...
மனித வாழ்வில் நாற்பது வயதுக்குள் நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழப்போகிறோம் என்பது முடிவு செய்யப்பட்டு விடுகிறது...
ஆசைகளையும், தேவைகளையும், குறைத்துக் கொள்ளுங்கள்...
இருப்பது ஒரு வாழ்க்கை, கிடைப்பதை கொண்டு திருப்தியுன் வாழ பழகிக்கொள்வோம்... 👍
வாழ்க வளமுடன்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...