Thursday, January 12, 2023

ஆமா இது உண்மைதான் போன்ல அலாரம் செட் செய்திருந்தாலே இந்த பிரச்சினை வந்திருக்காது.

 கணவனுக்கும் மனைவிக்கும் சிறிய தகராறு. தகராறு பெரிதாகி ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர்.

ஒரு நாள் கணவன் தொழில் விசயமாக அதிகாலை 5மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.
மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை.
அதிகாலை 5 மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடிவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான்.
காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7. பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான். ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான்.
மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள். அதன்கீழ் ஒரு தாளில் மனைவி எழுதிவைத்திருந்தாள் ” மணி 5 ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று!
இந்த கதையில் சுய மரியாதையை காப்பாற்ற வேண்டி சீட்டில் எழுதி வைத்த கணவன், காலை தாமதமாக எழுந்தவுடன் கோபத்தில் சுய மரியாதையை மறந்து ஏன் என்னை எழுப்பி விடவில்லை என்று கேட்கிறார். முதல் நாள் இரவு கொஞ்சம் தனது சுய மரியாதையை மறந்து மனைவியிடம் எழுப்பிவிட சொல்லி இருந்தால் பயணம் தடைபட்டு இருக்காது.
இதே தவறைத்தான் இன்று நம்மில் பலரும் செய்து கொண்டு இருக்கிறோம். முதலில் சுய மரியாதையை யாரிடம் எங்கே காட்ட வேண்டும் என்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
மனைவி என்பவள்
உங்களில் ஒரு பாதி. உங்க உயிரில் ஒரு பாதி. உங்க உடலில் ஒரு பாதி.
அப்படிப்பட்ட மனைவியிடம் கொஞ்சம் ஈகோவை மறக்க பழகுங்கள். இது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது இருவருமே தான்.
வாழ்க்கை வாழ்வதற்கே, போராடுவதற்கு அல்ல.
May be an image of 1 person and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...