Friday, January 13, 2023

நாங்கள் ஏன் #ரஜினி தான் சூப்பர்ஸ்டார் ன்னு சொல்றோம்ன்னா அதுக்கு காரணம் இதுதான்.

 #முள்ளும்மலரும் படத்துல தன்னோட கையை இழந்தும் சரத்பாபு கிட்ட போயி ரெண்டு கையும் ரெண்டு காலு இல்லனாலும் பொழச்சுக்குவான் சார் இந்த காளி கெட்ட பையன் சார் இந்த காளின்னு சொல்லி அந்த வலியோட ஒரு சிரிப்பு சிரிப்பாரு பாருங்க அப்பப்பா, அதே படத்துல கிளைமாக்ஸ் தன் தங்கச்சி சென்டிமென்ட் காட்சியில் ரசிகர்களை அழ வைத்து விடுவார் அப்படி ஒரு நடிப்பு

#புதுக்கவிதை படத்துல பழைய காதலியை சந்தித்து பேசும் காட்சி நீயாவது நல்ல இருக்கீயா ன்னு கேட்பார் பாருங்க முதல் காதலின் வலியை பிரதிபலிப்பார்
தலைவரின் நூறாவது படமான #ஸ்ரீராகவேந்திரர் படத்தில் ராகவேந்திரா சுவாமியாகவே மாறியிருப்பார் ரஜினியா இது என ஆச்சரியப்பட வைத்திருப்பார்
#நல்லவனுக்குநல்லவன் படத்தில் தன மகளின் திருமணத்திற்கு சென்ற காட்சி, கிளைமாக்ஸ் ராதிகா இறக்கும் காட்சி
#படிக்காதவன் படத்தில் தன் தம்பி தேர்வில் பெயில் ஆகிவிடுவார் கோபமாக தம்பியை தேடி சென்று சந்திக்கும் காட்சியில், தலைவரின் தம்பி தலைவரை அவமானப்படுத்த தம்பி நம்மை ஏமாற்றி விட்டானே என்ற வலியுடன் சிரித்து கொண்டே yes yes என்று சொல்லி சிரித்து கொண்டே அழுவாரே அப்பப்பா முடியுமா
அதே படத்தில் தன் ஆசைப்பட்டு வாங்கிய காரை அடித்து உடைத்த காட்சி எல்லாம் நம்மை கண்ணீர் சிந்த வைக்கும் இதுதான் நடிப்பு
#தளபதி படத்தில், தலைவர் பானுப்பிரியா மகளுடன் பேசி கொண்டிருப்பது போல் ஒரு சீன் வரும் எங்க அம்மா என்னை தூக்கி எறிஞ்சிட்டா சொல்லும் போது தலைவரோட நடிப்பு அருமையாக இருக்கும், தலைவர் அவரது அம்மாவை சந்தித்து மடியில் படுத்து கொண்டு அழும் காட்சி, மம்முட்டி கொல்லப்படும் காட்சியில் தேவா தேவா என்று கதறும் காட்சி, முக்கியமாக சின்ன தாயவள் பாடல் காட்சி சொல்லவே வேண்டாம்
#மன்னன் படத்தில் தன் அம்மாவை சைக்கிளில் ஏற்றி வா வா என்று சொல்லி பாட்டு பாடும் காட்சி, கிளைமாக்ஸ்ஸில் விஜயசாந்தி கூட உரையாடும் காட்சி, தலைவரின் அம்மா தலைவரை கிருஷ்ணா என்று கூப்பிடும் போது அதிர்ச்சியுடன் திரும்பி அம்மா, என்னம்மா இதுன்னு சொல்வாரு பாருங்க அப்பப்பா தலைவா நீங்கள் எல்லாம் வேற லெவல்
#எஜமான் படத்தில் பட்டாம்பூச்சி பிடிக்கும் காட்சி, தனக்கு குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைக்க வேண்டும் என்று மீனாவிடம் உரையாடும் காட்சி, நெப்போலியன் தலைவரை அவமானபடுத்தும் காட்சி, மீனா இறக்கும் தருவாயில் தலைவரின் நடிப்பு நம்மை அறியாமல் கண் கலங்க வைத்த விடும்
#முத்து படத்தில் சரத்பாபு, தலைவரை அடித்து வீட்டை விட்டு விரட்டும் காட்சியில் அந்த முகப்பாவனை எல்லாம் வேற லெவல், எத்தனை உலகநாயகன் வந்தாலும் இதற்கு ஈடாகாது
#அண்ணாமலை படத்தில் தன்னை ஏமாத்த போறாங்க என்று தெரியாமல் தன் சொத்தை சரத்பாபுக்கு எழுதி கொடுக்கும் காட்சியிலும், தன்னோட வீட்டை இடித்ததும் கோபத்தோடு சரத்பாபு விடம் கோபமாக ஒரு நீண்ட வசனம் பேசுவாரே அப்பப்பா அதெல்லாம் பேச இன்னொரு நடிகன் பிறந்து தான் வரணும்
அதே படத்துல தன் மகளை கண்டித்து விட்டு என்னாலே என்னைய புரிஞ்சுக்க முடியல ன்னு சொல்லி தன்னோட காரை எடுத்துக்கிட்டு யாருமே இல்லாத இடத்துக்கு போவார், அப்போ மாடு மேய்ப்பவர் அந்த வழியாக பாட்டு பாடி கொண்டே வருவாரு, அதை பார்த்ததும் தலைவருக்கு கடந்த காலத்தை நினைத்து வருந்துவார் பாருங்க
#பாட்ஷா படத்துல தன் தங்கை திருமண விசயத்தை மாப்பிள்ளை வீட்டில் பேசும் காட்சியிலும், தன்னை கட்டி போட்டு அடி வாங்கும் காட்சியிலும் நடிகர் என்றால் அது ரஜினி தான் என்று சொல்ல வைத்திருப்பார்
#அருணாசலம் படத்தில் வடிவுக்கரசி தலைவரை டேய் அனாதை பயலே என்று திட்டும் காட்சியில், ஒரு நிமிடத்திற்கு மேலாக தன் கண் இமையை அசைக்காமல் நடித்து இருப்பார்
#படையப்பா படத்துல தன் காதலை சௌந்தர்யா கிட்ட வெளிப்படுத்தும் காட்சியிலும் சரி, தன் தங்கைக்கு எப்படிபட்ட மாப்பிள்ளை வேணும் என்று தங்கை சித்தாரா விடம் பேசும் காட்சியில் காண்போரை தன் நடிப்பால் கண் கலங்க வைத்து விடுவார்
#கபாலி யில் தன் மனைவியை மறுபடியும் சந்திக்கும் காட்சி
#தர்பார் படத்தில் மகள் இறக்கும் காட்சி, அந்த ரயில் நிலையம் சண்டை காட்சி
#அண்ணாத்த படத்தில் தன் தங்கைக்காக அலகு குத்தும் காட்சி, ஹோட்டல் சண்டை காட்சி, தலைவர் பிரகாஷ்ராஜ் கிட்ட மன்னிப்பு கேட்கும் காட்சி
இப்படி எத்தனையோ படங்களை சொல்லலாம் ஆனா அதுக்கெல்லாம் இந்த ஒரு பதிவு பத்தாது
சொல்லப்போனால் நடிப்பில் கமலை எல்லாம் எப்போதோ தூக்கி சாப்பிட்டு விட்டார், அதற்கு அப்புறம் தான் தனது பாதையை மாற்றினார்
ஒரு நடிகருக்கு வெறும் ஆக்டிங் மட்டும் பத்தாது, நடிப்போடு சேர்ந்து ஸ்டைல், மாஸ், காமெடி இப்படி எல்லாவற்றிலும் தன்னை ஈடுபடுத்தி கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி கஷ்டப்பட்டு இந்த உயர்த்திற்கு வளர்ந்தவர் தான் இந்த ரஜினி
சும்மா வந்தது அல்ல சூப்பர்ஸ்டார் பட்டம்
உளியால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி செதுக்கி உழைப்புக்கு தானாக தேடி வந்த பட்டம் #சூப்பர்ஸ்டார்
என் பதிவு உண்மையான ரஜினி ரசிகர்கள் நாலு பேருக்கு சென்றடைந்தாலே போதும், அதுதான் எனக்கும் திருப்தி. மாறாக லைக்ஸ்க்காக அல்ல .
May be an image of 1 person, beard and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...