Friday, January 13, 2023

பொங்கல் வரிசை......

 நம்ம வீட்ல இருந்து வேறொரு வீட்டுக்கு வாக்கப்பட்டு போன அக்கா/தங்கச்சிங்களுக்கு , அத்தைகளுக்கு பொங்கல் வரிசை கொடுத்துவிடறது டெல்டா பக்கம் வழக்கம்.. மொதல்ல பொங்கல் வரிசைன்னா என்னன்னு தெரிஞ்சுக்கலாம்..

இந்த வரிசைன்றது, பொங்கல் வைக்க பானை, பச்சரிசி, வெல்லம், சீனி, ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய், வாழைப்பழம், காய்கறிகள், கரும்பு, அரிசி, பூ, சோப்பு, சீப்பு, கண்ணாடி வகையறாக்கள் ன்னு பல பொருட்கள் , பொங்கலன்னிக்கு ​மொத நாள்.. அதாவது மார்கழி கடைசி நாள் சகோதரன் வீட்ல இருந்து சகோதரி வீட்டுக்கு வண்டில ஏத்தி அனுப்பி விடுவாங்க....
சகோதரன் வீட்ல இருந்து வரிசை கொண்டு வருவாங்கன்னு வடை , பாயாசம்னு தடபுடலா சமைச்சு வச்சுட்டு பொறந்த வீட்டு வ(ரிசை)ருகைக்காக வழிமேல் விழி வச்சு காத்திருப்பாங்க.... வழக்கமா மதிய சாப்பாட்டுக்கு வர மாதிரிதான் பிளான் பண்ணுவாங்க... அப்படி இப்படி லேட்டாகி 2-3 மணி ஆச்சுன்னா வீட்டுக்கும்-வாசலுக்குமா நடந்து நடந்து, தூறியடிய ( நமது வீட்டிற்கு வருவதற்கான நுழைவாயில்) பார்த்து பார்த்து கண்ணே பூத்து போகும்.. வாசப்படி தேஞ்சு போகும்... ஒரே பதப்பா (படபடப்பா) கெடந்து தவிப்பாங்க .. அந்த தவிப்புதான் இரத்த பந்தம் கொடுக்கிற பிணைப்பு... நெருக்கம்... உரிமை... எல்லாமே....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...