Sunday, January 15, 2023

இறைவன் அருளால் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம்.....

 என் தோழி, மகனின் திருமணத்தை திருப்பதியில் வைத்திருந்தாள். அவசியம் வரவேண்டும் என்று கூறி அழைப்பிதழோடு, எங்கள் இருவருக்கும் புத்தாடைகளும் கொடுத்துச் சென்றாள்.பள்ளித்தோழி.35 வருடங்களுக்கு பிறகு சந்திப்பு.அதனால் திருமணத்தில் கலந்து கொள்ள மனம் நிறைய பூரிப்பு.திருப்பதி என்றதனால் சாமி தரிசனமும் செய்யலாம் என்று 300 ரூபாய் கட்டணத்தில் பதிவு செய்தாகிவிட்டது.

அந்த நேரத்தில் எனக்கு காலில் எலும்பு முறிவு காரணமாக, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு , ஐந்து மாதங்கள் ஆன போதிலும், உள்ளுக்குள் ஒரு பயம்.அதுவரை வெளியே எங்கும் சென்றதில்லை.எதற்கும் இருக்கட்டும் என்று, (வாக்கிங் ஸ்டிக்) நடைப்பயிற்சிக்கு வாங்கிய உலோகக் கொம்புடன் (இது சரியாக உள்ளதா? ) திருப்பதிக்கு காரில் பயணம் செய்து, திருமண சத்திரத்திற்குச் சென்று, தோழியிடம் வருகையை பதிவுசெய்தோம்.
பிறகு மாலை மாப்பிள்ளை அழைப்பு, நலங்குக்குள்,( அவர்கள் தெலுங்கர்) திரும்பி விடலாம் என்று கூறிவிட்டு, சாமி தரிசனத்திற்குக் கிளம்பி விட்டோம்.
இங்கு தான் சோதனை ஆரம்பித்தது.கொஞ்ச தூரம் போனதும், கார் நடுசாலையில் நின்றுவிட்டது. எவ்வளவு முயற்சி செய்தும், காரை இயக்க முடியவில்லை.கணவருக்கு குப்பென்று வியர்த்து, ஒரே பதட்டமாகிவிட்டது.அவரே ஓட்டுநர்.
அதற்குள் பின்னால் ஓரிரு வண்டிகள் நின்று, பின் ஓரளவிற்கு சாலை காலியாக இருந்ததால், தாண்டிச் சென்று கொண்டிருந்தன. மூவரும் ( உடன் அவரது நண்பர் வந்திருந்தார்)இறங்கிவிட்டோம்.
கணவர் காரை ஓரமாக நகர்த்திவைத்துவிட்டு, சுற்றி பார்த்தால், எதிரில் முதியவர், ஊனமுற்றோர், நடக்கச் சிரமப்படுபவர்களுக்கான தரிசனம் செய்வதற்கான வழிப்பிரிவு.
உடனே , என் உடல் நிலையைக் கூறி, தரிசனத்திற்கு செல்ல கேட்டு, அனுமதி வாங்கி வந்தார்.உடன் ஒருவர் வரலாம் எனவே, கணவரும் நானும் சென்றோம்.நண்பர், வழக்கமான தரிசனத்திற்கு சென்றுவிட்டார்.
இங்கு தான் கடவுள் எனக்கு என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து , அவர் அருளால் சிரமப்படாமல், தரிசனம் செய்வித்தார்.அதற்கு கொண்டு சென்ற கோல் உதவியது.
தரிசனம் முடிந்து ஒரு டாக்சி பிடித்து, என்னை சத்திரத்தில் இறக்கிவிட்டுவிட்டு, காரின் பிரச்சினையை பார்க்கச் சென்றார்.
அதிசயம் என்னவெனில், நின்ற கார், இப்போது இயக்கியதும், இயங்க ஆரம்பித்து விட்டதாம். அவரது கவலையும் தீர்ந்தது.நல்லபடியாய் மறுநாள் திருமணம் முடிந்து, சென்னை வரும் வரை ஒரு தொந்தரவுமில்லை.
இப்படி, என் உடல் நிலைக் கருதி பயந்த பயண நோக்கம் இனிதே முடிய, அந்த திருமலை தெய்வம் துணையாய் இருந்தது.
ஓம் நமோ நாராயணாய !🙏🙏🙏🙏🙏
May be an image of 1 person, standing, outdoors and monument

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...