Monday, January 16, 2023

பாதுகாப்பு அங்கிகாரம் அனைத்தும் கணவருடன் வாழ்வதில் தான் வாழ்க வளமுடன் 🙏

 திருமணமாகி இரு வருடங்கள் ஆகின்றன.

குடும்ப பிரச்சினையால் கணவர் என்னை தள்ளிவைத்துள்ளார்.
என் வீட்டார் அவர் கட்டிய தாலியை கழற்றி வீசிவிடும்படி வற்புறுத்துகிறனர்.
என்னால் முடியவில்லை.
நான் அவரை வெறுக்காமல் காத்திருக்கிறேன். எனது இந்த முடிவு சரியானதா?
🧕உங்கள் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் உள்ள நீங்கள் காலத்தை கடத்தாமல் அவருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
வருடக்கணக்கில் காத்திருக்கும் வேலை எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது..
🧕நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது பிரச்சினை தம்பதிகளுக்கு மத்தியில் இருப்பதை விட இரண்டு குடும்பங்கள் மத்தியில் பெரும் ப்ரளயமே உள்ளது என்று நன்றாக தெரிகிறது..
உங்கள் கணவர் மேல் உங்கள் வீட்டினர் தான் பெரும் பகையோடு இருக்கிறார்கள்..
🧕என் தோழி ஒருவருக்கு இதே போல பிரச்சினை ஏற்பட்டது..
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகளை இரண்டு வீட்டார்களும் சண்டை போட்டு பெரிய பிரச்சினை ஆகி காவல் நிலையம் வரை சென்று விட்டது.
🧕பின்னர்..
இவர்கள் இருவரையும் சேர்ந்து வாழக் கூடாது என்று விவாகரத்து வாங்க முடிவு செய்து விட்டார்கள்..
🧕யார் முதலில் பேசுவது என்ற ஈகோ வேறு..ஒரு வருடத்திற்கு மேல் ஆயிற்று.
🧕நாங்கள் நண்பர்கள் அனைவரும் தோழி மற்றும் தோழியின் கணவரை ஒரு சிறு நிகழ்ச்சிக்கு அழைத்து இரண்டு பேரையும் சந்திக்க வைத்து பேச வைத்து விட்டோம்..
இருவரும் பின்னர் மலரும் நினைவுகளை தாங்க முடியாமல் ஒன்று சேர்ந்து…
வெளிநாடு செல்ல தீர்மானம் செய்து விட்டனர்..
இரண்டு குடும்பமும் அடித்து கொண்டு என்னமோ செய்து தொலையுங்கள்
என்று தனிக்குடித்தனம் சென்று நிம்மதியாக இருக்கின்றனர்..
🧕உங்கள் இருவருக்கும் பொதுவான நல்ல நண்பர்கள் மூலமாகவே பேசுங்கள்..
அல்லது கணவருக்கு மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பி விடுங்கள்..
🧕இன்று உங்களை தாங்கி கொண்டு இருக்கும் குடும்பத்தார்கள் நாளை உங்களால் தான் வீட்டில் பிரச்சினை வருகிறது..
நீ ஒழுங்காக வாழ்ந்து இருக்க வேண்டும் என்று உங்களை குற்றவாளியாக மாற்றி விடுவார்கள்.
🧕ஒன்று நீங்கள்..
உங்கள் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் அல்லது முறையாக விவாகரத்து செய்து வேறு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்..
அதை விடுத்து பிறந்த வீட்டில் இலவு காத்த கிளியாக இருப்பது எல்லாம் வேலைக்கு ஆகவே ஆகாது..
🧕உங்கள் தாய் தந்தை தற்போது ஆதரவாக இருந்தாலும்.
அவர்கள் காலம் கடந்த பிறகு உங்களுக்கு என்று உடன் பிறந்தவர்கள் கண்டிப்பாக துணையாக இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...