Friday, February 1, 2019

முருங்கை கீரை.....


முருங்கைக் கீரை உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்க வல்லது. எழுவகைத் தாதுக்களின் சூட்டைத் தணிக்கவல்லது. சிறு நீரைப் பெருக்கித்தள்ளும் ஆற்றலுடையது . நரம்பு இசிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமையுடையது.
சுக்கில உற்பத் தியைப் பெருக்கும். முருங்கைக் கீரை உண்பதால் சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும். கண் ஒளி பெருகும், முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்துச் சமைத்து உண்டுவர நீரிழிவு நோய் நீங்கும், உடல் வலுப்பெறும், காமாலை, மாலைக்கண் போன்ற நோய்களையும் நீக்கும்.
இக்கீரை இரத்தவிருத்திக்கும், தாது பலம் பெறவும் பெரிதும் பயன்படும் . முருங்கைப் பூவைப் பருப்புடன் வேக வைத்து உண்டுவந்தால் தலைக்கேறிய பித்தமும் வெப்பமும் தணிந்து கண்ணெரிச்சல் நீங்கும்.
முருங்கைப் பூவைப் பசுப் பாலில் சேர்த்து வேகவைத்துப் பாலையும் பருகிப் பூவையும் தின்றால் தாது பெருகும். ஆண்மைச் சக்தியும் உண்டாகும். முருங்கைக்காய்க் குழம்பு வகைகளை உண்பதால் மார்புச்சளி கபம் ஆகியன நீங்கும் . நரம்புகள் வலிமை பெறும் . அதிகமாக உண் டால் உஷ்ணவாய்வு நோய்கள் உண்டாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...