என்னோட மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலுக்குப் போற படங்களைப் போட்டு என்னை விமர்சிக்கிறாங்க.
கல்யாணம் ஆன நாள்லேர்ந்து இது நடக்குது. ஒருநாளும் நான் தடுத்தது இல்லை. அது அவங்க நம்பிக்கை. விருப்பம். ஒரு பெண் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கங்கிறதுக்காகவே அவங்களோட விருப்பங்களை கைவிடணும்கிறது அடக்குமுறை. நான் அதை செய்ய மாட்டேன். எங்கம்மா சாமி கும்பிடுவாங்க. தலைவர் தடையா இருந்தது இல்லை.
--மு.க.ஸ்டாலின் இன்றைய தி இந்து பேட்டியில்.

உண்மை தான். உங்கள் குடும்பத்தினரின் மனைவிமார்களின் விருப்பங்களை கைவிடணும்கிறது அடக்குமுறை என்பது புரிந்த உங்களுக்கு ஊரான் மனைவி விருப்பங்களை கைவிட வேண்டும் என்று விரும்புவது ஏன்?
தன் வீட்டில் நாத்திகத்தை அரங்கேற்றாதவர்கள் அடுத்தவன் வீட்டு ஆத்திகத்தை கிண்டல் பண்ணலாமா?
தன் பொண்டாட்டி தாலியை தவிர அடுத்தவன் பொண்டாட்டி தாலியை அருத்துகிட்டு திரிகின்ற உங்கள் நண்பர் வீரமணி செய்வது அடக்கு முறையாக தாங்களுக்கு தெரியாதது ஏன்?
அடுத்தவர்கள் நம்பிக்கையில் தலையிடுவது நாகரீகம் இல்லை என்ற பகுத்தறிவு இல்லாத தாங்கள் பகுத்தறிவுவாதியா?

பகுத்தறிவு என்பது எந்த சாதியை,எந்த மதத்தை விமர்சனம் செய்தால் எதிர்ப்பு இருக்காது என்பதை பகுத்தறிந்து செய்வதா?
எந்த சாதியை எந்த மதத்தை ஆதரித்து பேசினால் ஒட்டு கிடைக்கும் என்பதும் அதன் மூலம் நாமும் நம் சந்ததியும் சுகமாக வாழலாம் என்பதை அறிவதற்கு பெயர்தான் பகுத்தறிவா?
மற்றவர்கள் மனதை புண்படுத்தக் கூடாது என்ற இந்த அடிப்படை நாகரீகம் கூட தங்களுக்கு தெரியவில்லையா, அல்லது இதை எல்லாம் பகுத்தறிய கூடியவர்கள் தமிழகத்தில் இல்லை என்று கருதியிருக்கின்றீர்களா?
காலம் மாறிவிட்டது.
இதை இனி வரும் காலங்களில் மக்கள் தாங்களுக்கு புரியவைப்பார்கள் திரு ஸ்டாலின் அவர்களே.

No comments:
Post a Comment