எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது..
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்...
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது..
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்...
எங்கள் விரலைக் கொண்டு எங்கள் கண்ணைக் குத்திக் கொண்டு, பின்னர் அவன் குத்தினான்.அவனால் தான் குத்தினேன் என்று புலம்பிக் கொண்டிருப்பது தான் தமிழன்.
சமீபத்தில் நான் சளித் தொல்லையால் மிகவும் பாதிக்கப்பட்டேன்.மருந்துகள் குடித்தும் இருமல் நிற்கவில்லை.என் இரவுத் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தது....
நான் நகைச்சுவையாகக் கூறினேன்..
கடவுள் ஒவ்வொரு உடல் அங்கங்களையும் கழட்டித் துப்புரவாக்குமாறு படைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..
நான் உடல் பாகங்கள் சுத்தம் செய்யும் கடை ஒன்றை வைத்து நிறையப் பேரின் மூளைகளை சுத்தம் செய்து கொடுத்திருப்பேன் என்று.
ஆமாம் எனக்கு அவ்வளவு கோபம் இந்த சமூகத்தில் நடப்பவைகளைப் பார்த்து.

சகோதர யுத்தம் பற்றி கூறி , அடுத்தவனைத் தாக்குகிறோம் என்ற பெயரில் நீங்கள் உங்கள் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் இப்படிச் செய்தார்கள்.இவர்கள் அவ்வாறு அழித்தார்கள் என்று சண்டைகளிட்டுக் கொண்டு உங்கள் முகத்தில் நீங்கள் காறி துப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.இதில் எந்தப் பக்கமும் தாக்கப்படுபவன் தமிழன் என்று உங்களுக்கு புரியவில்லை.
நீங்கள் எதற்காக போராட்டத்தை ஆரம்பித்தீர்களோ அதை விட்டு நகர்ந்து, உங்களுக்குள் நீங்கள் தாக்கிக் கொண்டீர்கள். அதன் உண்மை நிகழ்வுகள் எதுவும் தொன்னூறுகளுக்குப் பின்னர் பிறந்தவர்கள் அறியாதது.
அவரவர் அவர் சார்ந்த இளைஞர்களுக்கு தங்கள் பக்கத்து நியாயங்களை மட்டும் முன் வைத்து காரணங்களைக் கூறி அவரவருக்கு பிடித்த விதத்தில் இளைஞர்களை மாற்றிக் கொண்டார்கள். உண்மையில் நடந்தது என்ன என்பதை இன்று வரையிலும் யாரும் நியாயமான முறையில் கூற முற்படவில்லை.அவரவருக்குப் பிடித்தபடி வரலாறுகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.அப்படியே உண்மைகளை எழுத ஆரம்பித்தவர்களையும்
போட்டுத் தள்ளினார்கள்.
போட்டுத் தள்ளினார்கள்.
இங்கே நீங்கள் அத்தனை பேரும் செய்த வினையின் பயன் ஒரு அறிவிலித்தனமான, சிந்தனை முடக்கப்பட்ட இளைஞர்கள் சமுதாயம் ஒன்றை உருவாக்கி விட்டது தான். அவர்கள் நல்லவர்கள் தான்.அவர்களை இயக்கிக் கொண்டிருக்கும் அரசியல் தலைகள் தங்கள் சுயலாபத்திற்காக இந்த இளைஞர்களின் வாழ்க்கையை சூனியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் தத்தமது பக்கம் நியாயம் என்று அடிபட்டுக் கொண்டு தான் விரும்பிய தலைவனைத் தவிர அடுத்தவருக்கு பிடித்த தலைமைகளைச் சாடிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது எவ்வாறு எனில் சினிமாவில் தனக்குப் பிடித்த ஹீரோ தான் நல்லவர் என்பதற்காக அடுத்த ஹீரோக்களை விரும்பும் நபர்களோடு சண்டையிட்டுக் கொள்வதைப் போன்றது.
இது எவ்வாறு எனில் சினிமாவில் தனக்குப் பிடித்த ஹீரோ தான் நல்லவர் என்பதற்காக அடுத்த ஹீரோக்களை விரும்பும் நபர்களோடு சண்டையிட்டுக் கொள்வதைப் போன்றது.
ஒவ்வொருவருக்கும் தனக்குப் பிடித்த தலைவர் என்று இருப்பது தப்பில்லை.ஆனால் அதற்காக அடுத்தவன் தனக்குப் பிடித்த தலைவனைப் பற்றி கூறி விட்டால் அதற்குப் பதிலடியாக இவர்கள் அவரைக் கிண்டலடிப்பதும், அவமானப்படுத்துவதும், சண்டைகள் இட்டுக் கொள்வதும் மிகவும் கேவலமானது.
எத்தனையோ சினிமாக்களில் பார்த்திருக்கிறோம்.ஒரு குடும்பத்தில் ஒற்றுமையாக வாழும் சகோதரர்களைப் பிரிக்க எவனோ ஒருவனும், எவ்ளோ ஒருத்தியும் வருவார்கள்.பிணக்குகளை உருவாக்கி அந்தக் குடும்பத்தை இலகுவாக பிரித்து விடுவார்கள்.இதையே தான் எப்போதும் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் ஒற்றுமையாகவும், சுயநலமில்லாமலும் இருந்தால் எப்படி இன்னுமொரு கூட்டத்தால் உங்களைப் பிரிக்க முடியும்.அவர்கள் எதிரிகள்.எங்களை அழிக்க நினைக்கிறார்கள் என்று தெரிந்தால் பலமாக ஒன்று திரள்வதை விட்டு, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்தும், காறி உமிழ்ந்து கொண்டுமிருந்தால் கூத்தாடிகள் கொண்டாடத் தான் செய்வார்கள்.
முதலில் நீங்கள் தமிழர்களாக ஒன்றிணையுங்கள். அவன் தவறு செய்தான்.இவன் தவறு செய்தான் என்று விளக்கம் கொடுப்பதால் இழந்து போன எதுவும் மீண்டும் வராது.மாறாக நீங்கள் நடந்து கொள்ளும் முறைகளால் தமிழர்கள் தங்களைத் தாங்களே தாக்கிக் கொண்டு அசிங்கப்படுவதை அந்த ஆண்டவன் நினைத்தாலும் தடுக்க முடியாது.இது தொடருமானால் சகோதர யுத்தம் ஒன்றைக் கடக்கும் சூழ்நிலையைத் தான் நாங்கள் சந்தித்தாக வேண்டியது வரும்.
அதனால் பழைய பஞ்சாங்கக் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி தமிழ் மக்களுக்கு இனியாகிலும் நிம்மதியாக வாழும் சூழலை எவ்வாறு ஏற்படுத்திக் கொடுப்பது என்று சிந்தியுங்கள்.நீங்கள் முகநூலில் உங்கள் டைம் பாஸுக்கு கிறுக்கும் கிறுக்கல்கள் நாளைய சந்ததிக்கு கொடுக்கப்பட இருக்கும் ஆவணங்கள் ஆகலாம்.ஆகவே உங்கள் சிந்தனைகளை நல்ல வழியில் பயன்படுத்தி உங்கள் எழுத்துக்களால் தமிழ் சமூகம் பயன்பாடடையச் செய்யுங்கள்.
ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்ற ஒரு கூட்டம் தங்கள் உள்ளத்தில் இருக்கும் வக்கிர
சிந்தனைகளை ஆங்கிலத்தில் உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஐயா புத்திஜீவிகளே இந்த அப்பாவி இளைஞர்கள் தமிழில் குத்தி முறிவதை இன்னொரு சமூகம் படித்தாலும் புரிந்து கொள்ளாது.ஆனால் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதி எங்கள் அசிங்கமான சண்டைகளை உலகமே படிக்கச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஏனெனில் எங்கள் மீது சத்தியெடுத்து எங்களை அசிங்கப்படுத்த அநேகமானோர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
...விதைப்பவை வினையானால் அறுக்கப்படுவதும் வினைகளே... என்று கூறிக் கொண்டு...
No comments:
Post a Comment