Thursday, February 7, 2019

தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம்: உச்ச நீதிமன்றம் மறுப்பு.

தினகரன் கட்சிக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தேர்தலில் 20 டோக்கன் கொடுத்து அமோக வெற்றி பெற்றார். தமிழகத்தில் இடைத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக் கோரி, டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், அஜய் ரஸ்தோகி அமர்வு விசாரித்து வந்தது.
முன்னதாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர், பதிவுசெய்யப்படாத, அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியாது. அந்த வகையில் டிடிவி தரப்புக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தால் வழங்க முடியவில்லையெனில் , ஒரு பொது சின்னத்தை ஒதுக்க உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என கருத்து தெரிவித்தனர்.
குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரிய வழக்கில் டிடிவி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் வாதத்தில், ''இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. தற்போது எங்களிடம் 20 எம்.எல்.ஏ.க்களும், 6 எம்.பி.க்களும் உள்ளனர். ஒரு பொதுவான பெயரும், சின்னமுல் இல்லை என்றால் எப்படி நாங்கள் அரசியலில் ஈடுபட முடியும். தேர்தல் நெருங்கும் வேளையில் எப்படி சின்னம் இல்லாமல் அரசியல் செய்ய இயலும்'' என கூறினார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தில்,''அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை டிடிவி தினகரனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியாகப் பதிவு செய்ய முடியுமா?
இதன் அடிப்படையில் இவர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கூடாது’’ என தெரிவித்தனர்.
இரண்டு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ''இரண்டு தரப்பினரிடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது ஒரு தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியதுபோல, டிடிவி தரப்புக்கு ஒரு பொது சின்னத்தை ஏன் வழங்கக்கூடாது?'' என தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதமும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ‘‘அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அக்கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த வழக்கை 4 வாரத்திற்குள் டெல்லி உயர் நீதிமன்றம் முடிக்க வேண்டும். 4 வாரத்திற்குள் உயர் நீதிமன்றம் முடிவெடுக்காவிட்டால், தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம்’’ என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...