Friday, February 8, 2019

நிதர்சனமான உண்மை 👌👌👏👏

#1976_லிருந்து_இன்று_2019 வரை உள்ள வருடங்களில் 
இளையராஜா தமிழனுக்கு கொடுத்த
ஏறக்குறைய 7000 பாடல்களை நீக்கி விட்டு பார்த்தால்
எப்படித்தான் இருந்திருக்கும் தமிழகம்.
ஒரு கற்பனை, ஆனால் நிச்சயமான உண்மை
1. இரவு நேர இதயத்தை வருடிச்செல்லும் தென்றலிசைப்பாடல்களை தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப இயலாமல் போயிருக்கும்,
2. எப். எம். ரேடியோ கேட்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து போயிருக்கும்,
3. 25 வாரங்கள் ஓடிய நூற்றுக்கணக்கான படங்கள் இருந்திருக்காது, பல நூறு வெள்ளி விழா கேடயங்களுக்கு அவசியமே இல்லாமல் போயிருந்திருக்கும் பலருடைய இல்லங்கள் அவைகளால் அலங்கரிக்கப்படாமல் போயிருக்கும்.
4. தமிழன் ஹிந்தி பாடல்களுக்கு அடிமையாகி போயிருப்பான்; அதன் அர்த்தம் தெரிந்து கொள்ள ஹிந்தியும் கற்றுக்கொள்ள தொடங்கியிருப்பான்; தமிழின் நிலை இன்றைய நிலையை விட மோசமான நிலையில் இருந்திருக்கும்.
5. இன்றைய டாஸ்மாக் கால் பாதிக்கப்பட்டவர்களை விட, மன வியாதியில் பித்து பிடித்தவர்கள் அதிகம் இருந்திருப்பார்கள்.
6. பலரும் காதலிக்காமலே போயிருந்திருப்பார்கள்.
7. அயல் நாட்டில் இருப்பவர் பலர் வாழ்க்கை மீதே பிடிப்பு இல்லாமல் போயிருந்திருக்கும்.
8. இன்றைய பல ஸ்டார் நடிகர்கள் ஸ்டார் ஆக்கப்படாமலே காணாமல் போயிருப்பார்கள்,
திடீர் பச்சைத்தமிழனின் சந்தர்ப்பவாத போர்க் கனவு வர வாய்ப்பே இருந்திருக்காது.
9. தமிழுக்கும் இசைக்கும் சம்பந்தம் இல்லை என்று முடிவே கட்டியிருப்பார்கள். கன்னட இசைக்கான மொழி தெலுங்கு என்ற கற்பித பொய் ஆணித்தரமாக நிறுவப்பட்டிருக்கும். இதையெல்லாம் இன்றும் உணராத தமிழன் தனக்கென இசை வரலாறு கூட இல்லை என்று அவமானப்பட்டிருப்பான்.
10. 80 - 90 களில் கேசட் கடைகளும், சி.டி. கடைகாரர்களும், வேறு வேலைகள் பார்த்துக்கொண்டு இருந்திருப்பார்கள்.
11. பேருந்துகள் செவி வறட்சியான பயணங்களைக் கொண்டதாக ஆகியிருக்கும்.
12. பண்ணைப்புரம் ஊர் பெயர் தமிழகத்துக்கு தெரியாமலே போயிருக்கும்.
13. புத்தாண்டா, பொங்கலா, தாய்மை உணர்வா, காதலா, பிரிவு சோகமா, எல்லாச் சூழ்நிலைக்குமான பாடல் கிடைக்காமல் போயிருக்கும்.
14. அவரின் மூலம் உருவான மற்றும், அவருக்கு மாற்றாய் திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட ஏ. ஆர்.ரகுமான் கிடைக்காமல் போயிருப்பார். இரண்டு ஆஸ்கர் கிடைக்காமலே போயிருக்கும்.
15. யூ டியூப் ல், செவிக்கினிய பாடல் இல்லாமல், மைக்கில் ஜாக்சன் போன்றவர்களின் பாடல்களைக் கேட்பவனாய் போயிருப்பான் தமிழன்.
16. இதோ பார் எங்க பாட்டு, எங்க இசை, எங்க இசையமைப்பாளன் என்ற பெருமிதம் வராமலேயே செத்து போயிருப்பான் பெரும்பாலான தமிழன். (இன்னும் கூட இசைஞானிக்கு உரிய அங்கீகாரம் தர மறுக்குது ஆரிய இந்தியம்)
17. கல்லூரிகளில் ஆண்டு விழாக்களுக்கு, பாடல், நடனங்களுக்கு பாடல்கள் இல்லாமலே போயிருந்திருக்கும். கவிதையும், பேச்சுப்போட்டியும் மட்டுமே பெரும்பாலும் நடத்தப் பட்டிருக்கும்.
18. "பிளட்கேன்சர்", முக்கோணக்காதல், பழிவாங்கல் - போன்று ஒரே படிமான படங்களாய் தொடர்ந்து வந்தாலும் கூட அவரின் பாடல்களால் தப்பிப் பிழைத்த, வாகை சூடிய இயக்குனர்களை இழந்திருக்கும்.
19. வரலாற்றில் சில காலத்தை இருண்ட காலம் என்று சொல்வதைப்போல, (80-2000) கால கட்டத்தை குறிப்பாக 80 களை தமிழக இசையின் இருண்ட காலம் என்றே மாணவர்கள் படித்திருப்பார்கள். (இன்றைக்கும் திரைப்படங்களில் "1980 கள்" என்ற கால கட்டத்தை குறித்துக்காட்ட இளையராஜா பாடல்களை பயன்படுத்துவது என்பது தவிர்க்க முடியாத தேவை)
20. வைரமுத்து போன்ற கவிஞர்களின், எஸ்.பி.பி. போன்ற பாடகர்களின் ஆளுமை முழுமை அடையாமல் போயிருந்திருக்கும்.
21. சிறந்த நவீன இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, பாடகி பவதாரிணி போன்றவர்களை இழந்து போயிருக்கும்.
22. 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த இராட்சச திறமை படைத்த இசைப்பிரம்மம் தமிழ்நாட்டுக்கு அடையாளமாய் இல்லாமல் போயிருக்கும். (திருவள்ளுவர் போல இவரும் குறைந்தது 1330 படங்களுக்கு இசையமைக்கவேண்டும்)
23. இருக்கும் 72 தமிழிசை ராகங்களுக்கு மேலாக பஞ்சமுகி என்ற புதிய ராகம் கண்டுபிடிக்கப்படாமலே போயிருக்கும். காண்க:
24. தமிழிசையின் ஆதி மும்மூர்த்திகளான அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோர் வளர்த்த தமிழிசை புறக்கணிக்கப்பட்டு தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் என்பவர்களின் தெலுங்கு மொழி கீர்த்தனைளே முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நாட்களில் தமிழிசையை திரையிசை மூலம் நிறுவி இனி வரும் எதிர்கால சந்ததி தமிழிசை மேன்மையை தெரிந்து கொள்ளவும், வளர்க்கவும் வழி இல்லாமல் போயிருந்திருக்கும்.
25. கன்னடம் தனியொரு மொழியாகத் தோன்றி 1100 ஆண்டுகளே ஆகின்றன. தெலுங்கு மொழி தோன்றி 900 ஆண்டுகளே ஆகின்றன.[காண்க] ஆனால் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரங்கள் தோன்றிவிட்டன. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசை செழித்து தழைத்து ஓங்கி நின்றது என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. காண்க:
தமிழிசையின் தொன்மையை தென்னிந்திய மொழிகள், வட இந்திய ஹிந்தி மொழி என அனைத்திலும் இந்த நூற்றாண்டில் ஆழப்பதிக்க ஆள் இல்லாமலே போயிருந்திருக்கும். (தமிழரின் 2500 ஆண்டு தொன்மையுடைய மதுரை கீழடியை மூடி மறைக்க பார்ப்பது போல், தமிழிசை வரலாறும் மூடி மறைக்கப்பட்டிருக்கும். ஆனால் இசைஞானி மீட்டு கொடுத்திருக்கிறார்)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...