வாசுதேவன் சராசரிக்கும் கீழான பாடகர்தான்" என்றான்.
அவன்மீது தவறில்லை, தொடர்ந்து சுமார் நூறு பாடல்களையே இளையராஜாவின் படைப்புகளாக எல்லா ஊடகங்களிலும் திரும்பத் திரும்ப ஒளி(லி)பரப்பியவர்களுடைய தவறு. இதனால், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா போன்றோரின் அற்புதமான பல பாடல்கள் வெளிச்சத்துக்கு வரவே இல்லை. திரும்பத் திரும்ப SPB யையும் ஜானகியையும் யேசுதாஸையும்தான் கேட்டுக்கொண்டிருந்தோம், கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆகவே, அவர்கள்***மட்டுமே*** சிறந்த பாடகர்கள் என்ற பிம்பம் இங்கே உருவாகிவிட்டது.
அதேபோல், கேளிக்கைப்பாடல்களை அதிகம் பாடுகிறவர்மீது நமக்கு அதிக மதிப்பு வருவதில்லை. உதாரணமாக, 'அரிசி குத்தும் அக்கா மகளே' பாட்டைக் கேளுங்கள், அதனை அவர் பாடியிருக்கும் அழகு 'பொத்திவெச்ச மல்லிகை மொட்டு'க்கு எவ்விதத்தில் குறைவு? 'ஊரு விட்டு ஊரு வந்து' எந்தவிதத்தில் 'மாங்குயிலே பூங்குயிலே'வைவிடத் தாழ்ந்துபோகிறது?
இங்கே அழுத்தமாகத் திரும்பவும் சொல்கிறேன்: மலேசியா வாசுதேவன்போல் ஒரு பாடகர் நமக்குக் கிடைக்க நாம் தவம் செய்திருக்கவேண்டும், அவரது பாடல்களில் வெறும் 5%ஐ எந்த முன்தீர்மானங்களும் இல்லாமல் கவனமாகக் கேட்டால்கூட, இந்தப் பேருண்மையை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.
இத்தேடலைத் தொடங்க, என் சில சிபாரிசுகள், இது தரவரிசை அல்ல, சட்டென்று நினைவுக்கு வரும் சில பாடல்கள் இவை, கேளிக்கை, காதல், குரல் மாற்றம் என எல்லாம் கலந்தே இருக்கும், அதுதான் இயல்பு, அதுதான் மலேசியா:
1. தொன்றுதொட்டு இன்றுவரை: அவதாரம்
2. ஆசைக்கிளியே: தம்பிக்கு எந்த ஊரு
3. குயிலுக்கொரு நிறமிருக்கு: சொல்லத் துடிக்குது மனசு
4. அரிசிகுத்தும் அக்காமகளே: மண்வாசனை
5. பஞ்சுமிட்டாய் சேலைகட்டி: எட்டுப்பட்டி ராசா
6. அள்ளித்தந்த வானம்: நண்டு
7. கட்டிவெச்சுக்கோ எந்தன் அன்பு மனச: என் ஜீவன் பாடுது
8. சொக்குப்பொடி கக்கத்துல: மாவீரன்
9. ஊரு விட்டு ஊரு வந்து: கரகாட்டக்காரன்
10. மாமாவுக்கு: புன்னகை மன்னன்
11. மலர்களே நாதஸ்வரங்கள்: கிழக்கே போகும் ரயில்
12. இந்த மின்மினிக்கு: சிவப்பு ரோஜாக்கள்
13. நீங்காத எண்ணம் ஒன்று : விடியும் வரை காத்திரு
14. பொன்மானத்தேடி :எங்க ஊர் ராசாத்தி
15. கோடைக்கால காற்றே : பன்னீர் புஷ்பங்கள்
16. தங்கச்சங்கிலி மின்னும் : தூறல் நின்னுபோச்சு.
17. ஆகாய கங்கை , ஒரு தங்கரதத்தில் : தர்மயுத்தம்.

No comments:
Post a Comment