நித்திய கல்யாணியின் இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும்.
இதன் படத்தை பார்க்கும் பொழுதே உங்களுக்கு இந்த செடியை நிறைய இடங்களில் பார்த்தது நினைவில் வரும்.
ஆனால் இதன் மகத்துவம் அறியாததால் இதனை பாதுகாக்க மறந்து விட்டோம்.
இந்தியாவில் சில மாநிலங்களில் இந்த நித்ய கல்யாணி செடியை வணிக ரீதியாக பயிர் செய்கின்றனர்.
நித்ய கல்யாணி செடியின் அணைத்து பாகங்களும் நன்கு பதப்படுத்தப்பட்டு அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நல்ல உள்ளம் கொண்ட மானுடம் போலவே, இது எந்த சூழலிலும் தன்னை மாற்றி கொள்ளாமல் அதே தன்மையுடன் தளராமல் வளரக்கூடியது.
நித்ய கல்யாணி பூத்து குலுங்க எந்த வித கட்டுப்படும் வைத்து கொள்வது இல்லை.
ஆண்டின் அணைத்து மாதங்களிலும் பூத்து குலுங்கி மகிழ்ந்து கொண்டே உள்ளது.
நாம் ஊர்களில் சுடுகாடு, கல்லறை போன்ற இடங்களில் வளர்வதால் இதற்கு சுடுகாட்டு பூ, கல்லறை பூ என்ற பெயர்களும் உண்டு.
கல்லறையில் வளர்ந்தால் என்ன காடுகளில் வளர்ந்தால் என்ன நித்ய கல்யாணி அவள் குணத்தை மாற்றிகொள்ளவதே இல்லை.
நித்ய கல்யாணியின் மருத்துவ மகத்துவம் அறிந்து கொண்டால் இனி உங்கள் இல்லத்திலும் வாசம் செய்வாள்
நித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது.
நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது.
புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது.
நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
நித்திய கல்யாணி பூக்கள், சீரகம். 5 முதல் 10 நித்திய கல்யாணி பூக்களை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தம் சீராகும். நாள்பட்ட புண்கள் சீக்கிரம் ஆறும்.

நித்திய கல்யாணி இலை, பூ ஆகியவற்றில் இருந்து புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.
மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
நித்திய கல்யாணி பூக்கள், கருஞ்சீரகம். நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும்.

நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், நித்திய கல்யாணி இலை. ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.
No comments:
Post a Comment