வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த சுரங்கமாக விளங்குவது ஓட்ஸ். அது நம்உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க வல்லது. நம் ரத்தத்தில் சர்க்கரைஅளவை நிலையாய் வைக்கும். வியாதிகள் நம் உடலை அண்டாமல் உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தி தரக்கூடியது. தன்னிடத்தே நிறைந்த நார்ச்சத்தினால் மலச்சிக்கல்இல்லாமல் உடலைப்
பாதுகாக்கிறது. ஒப்பில்லாத ஓட்ஸ்
இத்தனை உயர்வுமிக்க ஓட்சை நாம் தினசரி உணவில் சேர்த்து வந்தால்ஆரோக்கியமான ஆனந்த வாழ்வு வாழலாம். ஓட்சின் உயர்வுக்கு மற்றுமொருகாரணம், அதை சிறிதளவே உட்கொண்டாலும் வயிற்றை நிரப்பி நீண்ட நேரத்திற்குபசி எடுக் காமல் இருக்க வைக்க வல்லது. மூன்று மணி நேரம் பரீட்சைஎழுதுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்பாகவே வீட்டை விட்டுக்கிளம்ப வேண்டிய மாணவர்கள் காலைச் சிற்றுண்டியுடன், ஒரு கப் ஓட்ஸ் கஞ்சிசாப்பிட்டு கிளம்பினால் 6 மணி நேரம் கழித்து மதிய உணவு உண்ணும் வரை பசிதாங்கி புத்துணர்ச்சியுடன் பரீட்சை எழுத உதவும். தினசரி ஓட்ஸ் சிறிதளவுஉட்கொள்வதை வழக்கமாக்கி கொண்டால் அது இதயத்திற் கும் நன்மை பயக்கும்என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். பாலின் சத்துக்கள், உலர் பழங்களின் சுவைஇரண்டையும் ஓட்சின் இயல்பான சுவையுடன் சேர்த்து இம்முறை ஓட்ஸ் கஞ்சிசெய்வோமா! ஓட்ஸ் கஞ்சி
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 4 டேபிள் ஸ்பூன்
பால் - 2 கப்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
முந்திரி, வால்நட், பாதாம்,
திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* 2 கப் பாலை ஒன்றரை கப்பாகச் சுண்டும் வரை நன்கு கொதிக்க விடவும்.
* கொதிக்கும் பாலில், ஓட்ஸ், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
* இப்போது முந்திரி, வால்நட், பாதாம், திராட்சை அனைத்தையும் பொடியாகஅரிந்து அதனை கொதிக்கும் பாலில் ஏலக்காய்த்தூளுடன் சேர்க்கவும்.
* ஓரிரு நிமிடங்களில் இறக்கினால் ஒப்பில்லாத சத்துடைய ஓட்ஸ் கஞ்சி ரெடி.
* சூடாக டம்ளரில் ஊற்றி கொடுக்கலாம். நீங்களும் சுவைக்கலாம். சுவைக்கானகுறிப்பு
மேலும் அதிக சுவை விரும்புவோர் பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்கவிடலாம். கவனிங்க...!
* காய்கறிகளை கழுவிய பிறகு வெட்ட வேண்டும், அப்போதுதான் மண் துகள்கள்,அழுக்கு நீங்கும். கிருமிகள் ஓரளவுக்கு அகற் றப்படும். வெட்டிய பிறகு கழுவினால்சத்துப் பொருட்கள் குறைந்து விடும்.
* புழு, பூச்சி தாக்கிய காய்கறியை பாதிக்கப் பட்ட பகுதியை மட்டும் நீக்கிவிட்டுபயன் படுத்தக் கூடாது. முழுவதையும் பயன் படுத்தாமல் இருப்பதே நல்லது.
* கண் கரிக்காமல் வெங்காயம் வெட்ட வேண்டுமானால், அதன் மூக்குப் பகுதியைஅகற்றிவிட்டு தண்ணீரில் ஓரிரு நிமிடங்கள் போட்டு வைத்திருந்து பிறகு வெட்டிபயன்படுத்தலாம். அதேபோல மூக்கு அரிந்த வெங்காயத்தை அடுப்பு வெப்பத்தில்லேசாக வைத்திருந்து பிறகு அரிந்து கொள்ளலாம்.
* சமையலில் உப்பு கூடினால் ஒன்றிரண்டு உருளைக் கிழங்கை வெட்டிப் போட்டுவேக வைத்துக் கொள்ளலாம். கிழங்கு சேர்க்காத குழம்பு எனில் ஒரு எலுமிச்சையைபிழிந்து ஊற்றலாம். காரம் கூடினாலும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
* எப்போதுமே சாப்பிட்டபின் ஒன்றிரண்டு சீரகத்தை வாயில் போட்டுக் கொள்வதுஜீரண சக்தியை அதிகரிக்கும்.
* சாப்பிட்ட பிறகு சூடாக டீ, காபி போன்ற பானம் பருகினால் இதயத்திற்கு நல்லது.

No comments:
Post a Comment