Sunday, February 10, 2019

அந்த ஆளுமைகள் இன்று இல்லை...

தமிழ்நாட்டில் திமுக அணியில் மட்டும் தான் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது என்று எல்லோரும் கருதிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் உண்மையில் அங்கும் இன்னும் கூட்டணி முடிவு பெறவில்லை. காரணம், பாமக இப்பொழுதும், திமுகவிடமும் அதிமுகவிடமும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஒருவேளை, திமுக கூட்டணியில் பாமக இணைந்தால், திருமாவளவன் அங்கு இருக்க மாட்டார். அவர் அதிமுகவிடம் வருவார். அதேசமயம் அதிமுகவிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் முழு நம்பிக்கையுடன் கூட்டணியில் இருப்பேன் என்கிறார். மேலும், தேமுதிகவும் அதிமுகவுடன் இணைந்து, அதனுடன் பாமக வும் இணைந்தால் அதாவது, அதிமுக தேமுதிக பாமக ஒன்றுபட்டால், அது கண்டிப்பாக வெற்றியை நோக்கி தான் போகும். இந்த கூட்டணி பாஜகவை ஏற்றாலும் நிராகரித்தாலும் அது பாஜகவை எந்த நிலைக்குக் கொண்டு போகும் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆகவே, முகநூலில் பாஜக தமிழ்நாட்டில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள், உண்மை நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், மறுக்கிறார்கள். மோடி என்ற சொல், மற்ற மாநிலங்களில் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல உதவலாமே தவிர, தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் கண்டிப்பாக ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் துணையினால் தான் பாஜகவால் அதிகமான எம்பி களை பெற முடியும். இதுதான் நிதர்சனம். கூட்டணி அமைந்தால் ஒரு பேச்சு. முடியாவிட்டால் வெறுப்பு பேச்சு என்று மற்ற கட்சிகள் சொல்வது போல் தான் தமிழக பாஜகவினர்களும் முக்கியமாக முகநூல் நண்பர்களும், கோபத்துடனும் ஆத்திரத்துடனும், ஒருதலைப்பட்சமாகவே சிந்தித்து, தங்கள் கருத்துக்கு ஒத்து வருபவர்களை மட்டுமே ஏற்றுக்கொண்டும், இல்லாவிட்டால், திட்டுவதும், அவர்கள் எந்த விதத்திலும் திராவிட கட்சிகளை விட மாறுபட்டவர்கள் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. சிந்திப்பீர்களா? சரியாக செயல்படுவீர்களா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...