Wednesday, February 6, 2019

இதுதான் யதார்த்தம் .

தி மு க நண்பர் ஒருவர் இன்று காலை ஒரு விஷயமாக தொடர்பு கொண்டார் . விஷயத்தை பேசிய பிறகு அரசியல் பற்றி பேச்சு வந்தது .அவர் திமுக தலைமையுடன் தொடர்புடையவர். (இறை நம்பிக்கை உடையவர் ) அப்போது நானும் BJP க்கு வரலாமா என்றிருக்கிறேன் என்றார் , நான் ஆச்சரியமாக என்ன சார் எல்லா கருத்து கணிப்பும் திமுகவிற்கு ஆதரவாக உள்ள நிலையில் இப்படி சொல்கிறீர்களே என்ற போது , அவர் சார் எல்லாம் பம்மாத்து வேலை சார்.. கருப்புப் பண நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஊடக ஒனர்கள். சில கிறிஸ்துவ அமைப்பினர் , மற்றும் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட கல்லூரி உரிமையாளர்கள் , சபரீசன் ஆலோசனையில் பேரில் ஊடக உதவியுடன் செய்யும் கருத்துருவாக்கம்தான். ஆனால் பொதுமக்கள் மத்தியில் திமுகவிற்கு வரவேற்பில்லை இது தளபதிக்கும் தெரியும், உதாரணம் RK நகர் தேர்தல் முடிவு . 13 கட்சி கூட்டணி 22 அமைப்புகள் ஆதரவு தெரிவித்தும் திமுக டெபாசிட் இழந்தது. ஜெயலலிதா போட்டி போட்ட போது கூட 55000 வாக்குகள் திமுக வாங்கியது, அந்த கொத்தடிமை ஓட்டு எங்கே போனது, அப்போ கட்சிக்காரனே ஒட்டு போடவில்லை ,அதனால் தான் தளபதி சோர்வாக உள்ளார். திமுககாரன் என்றாலே கொள்ளைக் காரன் மாதிரி பார்க்கிறார்கள். மக்கள் திமுககாரன் முன்பு சிரித்து பேசிவிட்டு பின்னால் தவறாக விமர்சிக்கிறார்கள். தமிழகத்தில் காங்கிரலை சுத்தமாக வெறுக்கிறார்கள் . .ஆனால் உண்மையில் கீழ்த்தட்டு, நடுத்தர மக்கள், சிறு வியாபாரிகளிடம் மோடிக்கு தான் ஆதரவு அதிகமாக உள்ளது .ஆகவே BJP, அதிமுக , பாமக கூட்டணி அமைந்தால் 30-35 இடங்களில் வெல்லும், இந்த கூட்டணி தொடர்ந்தால் 2021 தேர்தலில் மீண்டும் தமிழகத்தில் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும்..அதனால் தான் இப்போதே BJP க்கு வரலாமா என்று யோசிக்கிறேன் என்றார்.
இன்று இதுதான் யதார்த்தம் .
உண்மையும் கூட.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...