தமிழக முதல்வர் மக்கள்திலகம் கோட்டைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்...
போகும் வழியில் ராணி மேரிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவியர் கூட்டம்...
டிரைவரிடம் சொல்லி தனது காரை அவர்களருகே நிறுத்துகிறார்... மாணவிகளும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இன்பஅதிர்ச்சியில் உறையும் போதே...!
'என்ன கூட்டம் இங்கே? 'என முதல்வர் கேட்க...அங்கிருந்த மாணவிகள்...
'ரொம்ப நேரமா பஸ்ஸே வரலை சார்' எனச்சொல்ல...
'ரொம்ப நேரமா பஸ்ஸே வரலை சார்' எனச்சொல்ல...
உடனே முதல்வர், தனது உதவியாளரை அழைத்து, 'இப்ப உடனே இங்க வந்தாகணும்' னு சொல்ல, உதவியாளர் பல்லவன் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரை வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறுகிறார்.
பேருந்து வரும் வரை மாணவிகளுடன் ரோட்டிலேயே நின்று கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார் நம்ம வாத்தியார்...

அடுத்த பத்து நிமிடங்களிலேயே மூன்று பஸ்கள் ஒன்றாக வந்ததும்... மாணவரியரும், பொதுமக்களும் வாத்தியாருக்கு நன்றி சொல்லியும் விசிலடித்தும் தங்களின் நன்றிகளைத் தெரிவித்தனர்...
முதல்வரின் கார் கிளம்பியது...உதவியாளர் தயங்கித் தயங்கி எம்ஜிஆரிடம் கேட்டார்...'ஐயா! நீங்க காரிலேயே உட்கார்ந்திருக்கலாமே! வெயிலில் நின்று அம்மாணவியருடன் பேசிக்கொண்டிருந்தீர்களே...ஏன் ? ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ???
அதற்கு புரட்சித்தலைவர், ' இவர்கள் தான் நாட்டின் எதிர்காலத்தூண்கள்... நாளை இவர்களில் பலர் உயரதிகாரிகளாக ஆகலாம்...ஒரு பிரச்சனை வரும்போது தானே அதை முன்னின்று அதை சமாளிக்கணும்...அதற்கு நாம் தான் உதாரணமாக இருக்கவேண்டும்...
மேலும் நான் அவர்களில் ஒருவராக நின்று பேசும்போது மக்களுக்கும், முதல்வருக்குமுள்ள இடைவெளி அகலும்...பிரச்சனகளை நேரடியாக அறிந்துகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்...என்றார்...
வாத்தியாரின் பதிலில் உறைந்தது அந்த உதவியாளர் மட்டுமல்ல...நாமும் தான்...
No comments:
Post a Comment