1. உங்கள் பெண் குழந்தைகளை யாருடைய மடியிலும் எந்த சூழலிலும் உட்கார அனுமதிக்காதீர்கள்.
2. உங்கள் குழந்தைகள் 2 வயதை கடந்து விட்டாலே அவர்கள் முன் உடை மாற்றும் பழக்கத்தை கை விடுங்கள்.
3. எந்த காரணத்தை கொண்டும் உங்கள் குழந்தைகளை பெரியவர்கள் யாரும் "என்னுடைய மனைவி / கணவன்" என்று கூற அனுமதிக்காதீர்கள்.
4. உங்கள் குழந்தைகள் வெளியில் விளையாட செல்லும் பொழுது என்ன மாதிரியான விளையாட்டுகளை அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் இப்போதெல்லாம் சிறு குழந்தைகள் அவர்களுக்குள்ளேயே பாலின துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிகொள்கின்றனர்.
5. குழந்தைகளை அவர்களுக்கு பிடிக்காத யாருடைய வீட்டுக்கும் போக சொல்லி வற்புறுத்தாதீர்கள். அதேநேரம், உங்கள் குழந்தை குறிப்பிட்ட யாருடைய வீட்டிற்காவது செல்வதில் பிரியமாக இருந்தாலும் கவனமாகவே இருங்கள்.
6. மிகவும் கலகலப்பாக இருக்கும் உங்கள் குழந்தை திடீரென அமைதியாகிவிட்டால், பொறுமையாக என்ன நடந்தது என்று கனிவாக விசாரித்து காரணம் அறிய முற்படுங்கள்.
7. உங்கள் குழந்தைகளுக்கு பாலினம் குறித்தும் அதன் மதிப்புகள் குறித்தும் மிக கவனமாக கற்பியுங்கள். இல்லையென்றால் இந்த சமூகம் அவர்களுக்கு அதை பற்றி தவறாக கற்பித்து விடும் அபாயமுள்ளது.
8. அவர்களுக்கு அறிமுகம் இல்லாத புதிய பொருட்களை வாங்கி தரும் முன் நீங்கள் சற்று கவனமாக இருங்கள்.
9. தவறான டிவி சேனல்களை லாக் செய்து வையுங்கள். அதைபற்றி உங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சொல்லி இயக்க வேண்டாம் என்று கூறி விடுங்கள்.
10. முக்கியமாய் 3 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உறுப்புகளை அவர்களாகவே சுத்தம் செய்து கொள்ள கற்று கொடுங்கள். பிறர் எவரையும் தொட அனுமதிக்க கூடாது என்பதை அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.(ஏனென்றால் கருணை இரக்கம் சலுகைகள்... இவையெல்லாம் நம் வீட்டிலிருந்து தான் தொடங்குகின்றன)
11. குழந்தைகளுக்கு எப்போதும் கூட்டத்திலிருந்து விலகி இருக்க கற்று கொடுங்கள்
12. யாரை பற்றியாவது உங்கள் குழந்தைகள் உங்களிடம் புகார் கூறினால் அவர் யாராக இருந்தாலும் என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாக செய்யுங்கள். ....
No comments:
Post a Comment