கேரள மாநிலத்தில் திருச்சூரில் வேலைக்கு சென்ற பெண்ணை தரதரவென இழுத்துவந்து வெளியில் வைத்து கடுமையாக தாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினரை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்._
_கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளால் அறிவிக்க பட்ட பந்த் அன்று திருச்சூர் முத்தூட் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீலேகா வழக்கம்போல கடைக்கு சென்று தனது வேலையை தொடங்கினார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லெனின், குணசேகரன், ஜேம்ஸ் ஆகியோர் ஸ்ரீலேகாவை கடையை சாத்துமாறும், இல்லையென்றால் நடப்பது வேறு என்றும் எச்சரித்துள்ளனர். ஆனால் ஸ்ரீலேகா தனக்கு முக்கியமான பணிகள் இருப்பதாகவும், தான் வேலை செய்தால் மட்டுமே அதனை சரி செய்யமுடியும் என்று கூறி தனது பணியை தொடங்கினார்._
_அப்போது உள்ளே வந்த ஜேம்ஸ் (இடதுபுறம்) ஸ்ரீலேகாவை தரக்குறைவாக பேசியதுடன், சற்றும் எதிர்பாராத விதமாக உள்ளே சென்று இழுத்து வெளியில் போட்டு கதவை சாத்தினார். அத்துடன் கேமரா இல்லாத பக்கத்தில் ஸ்ரீலேகாவை இழுத்து சென்று கடுமையாக தாக்கி அடித்துள்ளனர்._
_இதில் பாதிக்கப்பட்ட ஸ்ரீலேகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த குண்டர்களை கைது செய்யவேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் இறங்கியுள்ளதால் கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்._
_இந்நிலையில் கடந்த வாரம் சென்னை காமராஜர் கலையரங்கத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க மாநாட்டில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன், இந்தியாவில் பசுவின் பெயரால் கலவரம் செய்பவர்களை கைது செய்வதற்கு பதில் பாசிசத்தை ஊட்டி வளர்க்கும் மோடி, அமிட்ஷாவை கைது செய்யவேண்டும். ஏனென்றால், அவர்கள்தான் இவை அனைத்திற்கும் காரணம் என்றார்._
_இதன் அடிப்படையில் ட்விட்டரில் அருணனிடம் ஸ்ரீலேகா தாக்கப்பட்ட விடியோவை மேற்கோள்காட்டி ப்ரிதிவிராஜன் என்ற நபர், நாட்டில் பாசிசம் பாசிசம் என்று சொல்லுவியே அருணா, இதற்கு பெயர் என்ன? பெண்ணை தாக்குவதற்கு பெயர்தான் வீரமா? ஏன் இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்பியதுடன், பிரதமரை கைது செய்ய சொன்னதுபோல் இப்போது தாக்கிய நபர்களுக்காக உன்னை கைது செய்யலாமா? என்று கடுமையான பாணியில் கேள்வி எழுப்பியுள்ளார்._
_இதற்கு பதில் சொல்லமுடியாத அருணன், அவரை பிளாக் செய்துள்ளதாகவும் ப்ரித்திவி ராஜன் குறிப்பிட்டுள்ளார்._
_விமானத்திற்குள் கோஷம் போட்ட சோஃபியா என்ற பெண்ணை தமிழிசை கைது செய்யவேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, தனிமனித சுதந்திரம் இல்லை என்று மிகப்பெரிய அளவில் ஊடகங்களில் பேசிய யாரும், பெண் தாக்கப்பட்டதை ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், அண்டை மாநிலத்தில் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை ஊடகங்கள் வெளியில் சொல்லாமல் மூடி மறைத்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment