Sunday, September 8, 2019

நாங்குநேரி தொகுதி விவகாரம்:தி.மு.க., - காங்., கூட்டணியில், உரசல்.

நாங்குநேரி தொகுதியை, தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுக்க, காங்கிரசிடம், கூட்டணி கட்சி தலைவர் ஒருவர் நடத்திய, 'பஞ்சாயத்து' தோல்வி அடைந்துள்ளது. இதனால், தி.மு.க., - காங்., கூட்டணியில், உரசல் உருவாகி உள்ளது.

தமிழகத்தில், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், நாங்குநேரி தொகுதியில், காங்., சார்பில் போட்டியிட்டு, வசந்தகுமார் வெற்றி பெற்றார். ராஜினாமாஇவர், லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு, எம்.பி.,யானதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நாங்குநேரி தொகுதிக்கும், எம்.எல்.ஏ., மறைவால் காலியான மற்றொரு தொகுதியான, விக்கிரவாண்டிக்கும், இடைத்தேர்தல் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.

காங்கிரஸ் சார்பில், மூத்த தலைவர் குமரி அனந்தன், வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த், வசந்தகுமாரின் மைத்துனர், எம்.எஸ்.காமராஜ், மறைந்த முன்னாள், எம்.எல்.ஏ., ஊர்வசி செல்வராஜின் மகன், அமிர்தராஜ் ஆகியோர், 'சீட்' பெற, முட்டி மோதுகின்றனர்.

வெள்ளோட்டம்:
தி.மு.க., கூட்டணி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், சமீபத்தில், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரை சந்தித்து, பேச்சு நடத்தினார். அப்போது, 'இடைத்தேர்தல், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கும், தி.மு.க., தலைவர், ஸ்டாலினுக்கும், 2021ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் வெற்றிக்கான வெள்ளோட்டமாக கருதப்படுகிறது. எனவே, தி.மு.க., போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும்; காங்., போட்டியிட வேண்டாம்' என, பஞ்சாயத்து பேசி உள்ளார். அதற்கு, காங்கிரஸ் தலைவர் பதில் கூறாமல், மவுனம் சாதித்துள்ளார்.
 நாங்குநேரி தொகுதி விவகாரம்:தி.மு.க., - காங்., கூட்டணியில், உரசல்
சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், வரும், 15ம் தேதி, குமரி அனந்தன் தலைமையில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இதில், வாழ்த்தி பேச, ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 'அன்றைய தினம், திருவண்ணாமலையில் நடக்க உள்ள, தி.மு.க., முப்பெரும் விழாவில் பங்கேற்பதால், தன்னால் வர இயலாது; தனக்கு பதிலாக, வேறு நபரை அனுப்பி வைக்கிறேன்' என, ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிருப்தி:
இந்நிலையில், நாங்குநேரியில், காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றி, அவற்றின் நகலை, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் வினியோகித்து உள்ளனர். இதனால், தி.மு.க., தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது.குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், 'நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும், தி.மு.க., போட்டியிடும்' என, திருவண்ணாமலையில் நடக்கும் முப்பெரும் விழாவில், ஸ்டாலின் அறிவிப்பார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...