Sunday, September 8, 2019

மாங்காய்_இஞ்சி.


பார்ப்பதற்கு இஞ்சியின் சாயலிலும், வாசனையில் மாங்காயின் மணத்தையும் கொண்டது மாங்காய் இஞ்சி. அதனால்தான் அதற்கு இப்படியொரு வித்தியாசமான பெயர்.
மாங்காய் இஞ்சி, மஞ்சள் குடும்பத்தை சார்ந்தது. இது இந்தியாவில் குறிப்பாக குஜராத், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அதிகம் விளைகிறது.
மாங்காய் இஞ்சி என ஒன்று இருப்பதே பலருக்கும் தெரியாது. அதைப் பலரும் வாழ்நாளில் சுவைத்திருக்கவும் மாட்டார்கள். இஞ்சியா என முகம் சுளிப்பவர்களும், இஞ்சி தின்ன குரங்கு பழமொழியை நினைத்துக் கொள்கிறவர்களும், தைரியமாக மாங்காய் இஞ்சியை சுவைக்கலாம். அதன் மணமும் சுவையும் யாருக்கும் பிடிக்கும்...
மஞ்சள், இஞ்சி போல் மாங்காய் இஞ்சியும் சிறந்த மருத்துவப் பயனைக் கொண்டது. ஆயுர்வேத மருத்துவத்தில் பல ேநாய்களை குணப்படுத்த இதை பயன்படுத்துகின்றனர். சரும நோய்களைக் குணப்படுத்தவும், இருமல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தவும், ஜுரம், விக்கல், காது வலி போன்ற நோய்களை குணப்படுத்தவும் ஆயுர்வேதத்தில் மாங்காய் இஞ்சி பயன்படுகிறது.
மாங்காய் இஞ்சியின் மருத்துவப் பயன்கள்...
* வயிறு சம்பந்தமான பிரச்னைகளையும், வாயுத் தொல்லையையும் சரியாக்குகிறது. ஜீரணத்தை அதிகப்படுத்துதல், பசியைத் தூண்டுதல் போன்றவற்றிற்கு மாங்காய் இஞ்சி பயன்படுகிறது.
* நுரையீரல் மற்றும் ஆஸ்துமா, இருமல் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது.
* உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்த பயன்படுகிறது.
* புற்றுநோயை குணப்படுத்துவதிலும் மஞ்சளைப் போல ஆன்டி-ஆக்ஸிடென்ட் ஆக பயன்படுகிறது.
* கேரட், பீட்ரூட் இவற்றுடன் புதினா, மாங்காய் இஞ்சி கலந்து செய்யும் ஜூஸ் புற்றுநோயைக் குணப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* பூஞ்சை நோய்களை குணப்படுத்த சரும மருத்துவத்தில் பயன்படுகிறது. சருமத்தில் ஏற்படும் காயம் மற்றும் அரிப்பை குணப்படுத்த இதன் சாறு பயன்படுகிறது.
* உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் தசை வலியைக் குறைக்க மாங்காய் இஞ்சி கலந்த தேநீர் பயன்படுகிறது.
* சமையலில் மாங்காய் சீசன் இல்லாத நேரங்களில் மாங்காய் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.
* தமிழ்நாட்டில் முக்கியமாக ஊறுகாய் செய்யப் பயன்படுகிறது.
* உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள் உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்பதால், ஊறுகாய்க்குப் பதிலாக மாங்காய் இஞ்சியை எலுமிச்சைச்சாறுடன் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...