அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது.
ஆனா பாருங்க!
மனிதனா பிறந்தாலும் நம்முடைய குணங்கள் மூன்று வகைகளில் பிரிச்சிருக்காங்க. அதை குணம்னு சொல்லாம, கணம்னு சொல்லியிருக்காங்க.
அவை
01) தேவ
02) மனித மற்றும்
03 ராட்சஸ.
01) தேவ
02) மனித மற்றும்
03 ராட்சஸ.
தேவ கணம் எனில், நம் குணங்கள் சாத்வீகமாகவும்,
மனித கணம் எனில் நம் குணங்கள் சாத்வீக தாமஸ குணம் உடையதாகவும்,
ராட்சஸ கணம் எனில் ராஜஸ குணம் உடையதாகவும் இருக்கும்.
சரி! இவை எதற்காக?
ஆண் பெண் என இருவர் கணவன் மனைவி ஆகிய போது, ஒருத்தருக்கொருத்தர் நட்புடனும், அமைதியுடனும், அன்புடனும் இருக்க வேண்டும் அல்லவா. அப்படி இல்லை எனில் நிலை என்னவாக இருக்கும் என்பதை ஆன்றோர்கள் நிறைந்த சபையில் அடியேன் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
சயன போகஸ்தானத்தை குறிப்பது இந்த கணப் பொருத்தம்.
முதலில் தேவ கணத்தில் உள்ள நட்சத்திரங்கள் எவை எவை என்பதை பார்ப்போம்.
அஸ்வினி
மிருகசீரிடம்
புனர்பூசம்
பூசம்
ஹஸ்தம்
ஸ்வாதி
அனுஷம்
திருவோணம்
ரேவதி
மிருகசீரிடம்
புனர்பூசம்
பூசம்
ஹஸ்தம்
ஸ்வாதி
அனுஷம்
திருவோணம்
ரேவதி
மனுஷ கண நட்சத்திரங்கள்
பரணி
ரோஹிணி
திருவாதிரை
பூரம்
உத்திரம்
பூராடம்
உத்திராடம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரோஹிணி
திருவாதிரை
பூரம்
உத்திரம்
பூராடம்
உத்திராடம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ராட்சஸ கண நட்சத்திரங்கள்
கார்த்திகை
ஆயில்யம்
மகம்
சித்திரை
விசாகம்
கேட்டை
மூலம்
அவிட்டம்
சதயம்.
ஆயில்யம்
மகம்
சித்திரை
விசாகம்
கேட்டை
மூலம்
அவிட்டம்
சதயம்.
கணங்களில் பொருத்தங்கள்:-
கீழ்காணும் நட்சத்திரங்களில் முதலாவது நட்சத்திரம் பெண்ணுடையது எனசும், இரண்டாவதாக வருபவை ஆணின் நட்சத்திரம் என அறியவும்.
உத்தமம்
தேவம் + தேவம்
மனுஷம் + மனுஷம்
மனுஷம் + தேவம்
மனுஷம் + மனுஷம்
மனுஷம் + தேவம்
மத்திமம்
தேவம் + மனுஷம்
தேவம் + ராட்சஸம்
தேவம் + ராட்சஸம்
அதமம்
மனுஷம் + ராட்சஸம்
ராட்சஸம் + தேவம்
ராட்சஸம் + மனுஷம்
ராட்சஸம் + தேவம்
ராட்சஸம் + மனுஷம்
மேற்கண்டவை விதிகள்.
இனி இதற்கு விதிவிலக்குகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
01) பதிமூன்று நட்சத்திரத்திற்கு மேலாக கூட்டுத் தொகை வரின் கணப் பொருத்தம் தேவையில்லை.
02) ராசி அதிபதி பொருத்தம் வந்தால் கணப் பொருத்தம் அவசியமில்லை.
03) வசியப் பொருத்தம் இருந்தாலும் கணப் பொருத்தம் அவசியமில்லை.
04) ஜாதக ரீதியாக 2-ஆம் இடம் சுபர் வீடாகி, சுபர் பார்வை பெற்றாலும் கணப் பொருத்தம் தேவையில்லை.
எல்லாவற்றிற்கும் விதிகளும் உண்டு. விதிவிலக்குகளும் உண்டு.
ஆனால், ஜாதக பொருத்தம் அமையாவிடில், 10-க்கு 10 பொருத்தம் அமைந்தாலும் அந்த ஜாதகத்தை தவிர்க்க வேண்டும்.
ஆனால், ஜாதக பொருத்தம் அமையாவிடில், 10-க்கு 10 பொருத்தம் அமைந்தாலும் அந்த ஜாதகத்தை தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment