தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்த ஏ.டி.பி.ஐசக் என்பவர் 1995 ஆம் ஆண்டு முதலாக ஆச்சி மசாலா தூள் தயாரித்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றார்.
ஆச்சி மசாலா தயாரிப்புகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, யு.கே, பெல்ஜியம், ஹாலந்து, பிரான்ஸ், டென்மார்க், சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா குடியரசு, D.R.காங்கோ, கென்யா, தன்சானியா, பப்புவா நியூ கினியா, மொசாம்பிக், மொரிஷியஸ், சீஷெல்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சவுதி அரேபியா இராச்சியம், லெபனான், இலங்கை, மாலதீவு, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆச்சி மசாலா தூள் தயாரிப்பு நிறுவனம் கேரளாவிலும் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. திருச்சூரில் இந்த நிறுவனத்தின் மசாலாப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி கொச்சியில் உள்ள உணவுப் பொருள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடத்திய ஆய்வில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடியில் பூச்சிக்கொல்லி மருந்துகளான இட்டியோன், புரபேனோபோஸ் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த மிளகாய் பொடிக்கு தடை விதித்து கேரள உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த மிளகாய் பொடிக்கு தடை விதித்து கேரள உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
24 வருடங்களாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு வரும் பூச்சி மருந்து கலந்த ஆச்சி மசாலா தூள் விற்பனையை தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒருவரும் கண்டுகொள்ள வில்லை என்பதுதான் அக்கிரமம்!
பொதுமக்களின் உயிருடன்
விளையாடும் இதுபோன்ற உணவுநிறுவனங்களையும் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு...
பொதுமக்களின் உயிருடன்
விளையாடும் இதுபோன்ற உணவுநிறுவனங்களையும் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு...
நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு...

No comments:
Post a Comment