Saturday, September 7, 2019

சந்திராயன் 2.

பூமியிலிருந்து நேராக நிலவை தொட்டு வந்திருந்தால் அது மிக சாதாரணமாக தான் அமைந்திருக்கும்.
ஆனால் பூமிக்கு நேரெதிரான யாரும் கண்டிராத எந்த நாடும் செல்ல துணியாத தென்துருவ பகுதியை ஆராய சென்றதே சாதனைதான்.
இது தெரியாமல் கலாய்த்து கொண்டிருக்கும் சில அறிவு ஜீவுகளுக்கு இது தெரியாது தான்.
கீழே இருக்கும் நிலவின் படத்தை சற்று பாருங்கள்.
அனைத்து நாடும் சென்ற வந்துள்ள இடத்தையும் இந்தியா சென்று சாதனை படைத்த இடத்தையும்...
கவலை வேண்டாம்..
சந்திரயான்-2 விண்கல ஆர்பிட்டர் இன்னும் சரியான முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த ஆர்பிட்டர் நிலவில்95% சதவிகிதம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது .சந்திரயான்2 விண்கலத்தின் ஒரு பகுதியான லேண்டரை தரையிறக்கும் பணி மட்டுமே தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிகிறது.
நிலவில் லேண்டர் தரையிறங்கும்போது, தகவல் தொடர்பை இழந்தது அது மட்டுமே தோல்வி..
நிறைய காரணங்கள் இருக்கலாம்
பூமியில் 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்பதைப் போல, நிலவில் 14 நாட்கள் பகல், 14 நாட்கள் இரவு ஆகும்.
நிலவில் தரையிறங்கும் லேண்டர் கருவியில் உள்ள கருவிகள் சூரிய சக்தியில் இயங்கக்கூடியது என்பதால், அவை அனைத்தும் தொடர்ந்து 14 நாட்கள் வெளிச்சத்தில் இயங்கும். அடுத்த 14 நாட்கள் இரவில் உறங்கும்...
ஒரு நாள் இல்லையெனில் ஒரு நாள் மீண்டும் முழுதாக வெற்றி பெறுவோம்.
எட்டும் தூரத்தில் இல்லை நம் இலக்கு ‌
வாழ்த்துக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்
மிக முக்கியமாக நம் தமிழ் தலைவன் சிவன் அவர்கள்..
ஈசனே எங்கள் வெற்றியை கொண்டாடும் நாளை விரைவில் கொடு ..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...