‘தன் மகளையே படுகொலை செய்த இந்திராணியின் ஒப்புதல் வாக்குமூலத்தை நம்பி, சிதம்பரத்தைக் கைது செய்வதா?’ என்று சீறுகிறது காங்கிரஸ். 2007 - இந்திராணி மும்பையில் கொடிகட்டிப் பறந்த காலம் அது. அன்று அதிகாரம் படைத்த பெண்களின் சின்னமாக இருந்த இந்திராணியின் முதல் கணவருக்குப் பிறந்த பெண்ணும், அவருடைய மூன்றாம் கணவருடைய முதல் தாரத்தின் பிள்ளையும் காதலித்ததால், முதல் கணவரும் - மூன்றாவது கணவரும், இந்திராணியும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கொலை செய்தனர்.
பெண்ணுரிமையின் பிம்பமான இந்திராணியும், ஆணடிமையின் சின்னமான பீட்டரும், 2015-ல் கைதாகி விசாரணை நடந்தபோது, கொலை மட்டுமல்ல, அது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்து சம்பந்தப்பட்ட குற்றமும் கூட என்பது தெரியவந்ததும், விசாரணையில் அமலாக்கத் துறையும் நுழைந்தது. அப்போது, கார்த்திக்கு அவர்கள் பணம் கொடுத்த விபரம் அமலாக்கத் துறைக்குக் கிடைத்து, அதை விசாரித்தபோது, இந்திராணி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இந்திராணி ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததால் கொலை வழக்கிலிருந்து அவர் தப்ப முடியாது. எனவே, அவருடைய வாக்குமூலத்தை நம்பலாமா என்கிற சட்டப்படியான கேள்வி, முதல் நோக்கு ஆதாரம் தேடுகிற நிலையில் (அதுவும் அவர் பணம் கொடுத்ததற்கு வேறு சான்றுகள் இருக்கும்போது) எழவே முடியாது. உயர்ந்த மனிதரான சிதம்பரத்தின் வழக்காயிற்றே. அதனால்தான் இந்த வாதமே எழுகிறது.
No comments:
Post a Comment