Tuesday, September 10, 2019

பா.ஜ.,வில் விரைவில் புகழேந்தி ஐக்கியம்?

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனை விமர்சித்த விவகாரத்தால், நெருக்கடியில் சிக்கியுள்ள, அக்கட்சியின் மாநில நிர்வாகி, புகழேந்தி, பா.ஜ.,வில் சேர்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், அ.ம.மு.க., மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், கொள்கை பரப்பு செயலர் பதவி, தனக்கு கிடைக்கும் என, புகழேந்தி எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு, மீண்டும் செய்தி தொடர்பாளர் பதவி தான் கிடைத்தது. இதனால், அதிருப்தி அடைந்த அவர், தினகரனை கடுமையாக விமர்சித்து பேசிய, வீடியோ வெளியானது.பேசியது உண்மை என, ஒப்புக் கொண்ட புகழேந்தி, அதை, அ.ம.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தியதாக, குற்றம் சாட்டினார்.

 பா.ஜ.,வில் விரைவில் புகழேந்தி ஐக்கியம்?

'இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பேன்' என, நேற்று தினகரன் தெரிவித்துள்ளார். இதனால், அ.ம.மு.க.,வில் நீடிக்க முடியாத நிலைமை, புகழேந்திக்கு வந்துள்ளது. எனவே, அவரை, தி.மு.க.,வில் சேர்க்க, அவரது பழைய சகாக்கள், தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி போன்றவர்கள் முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், புகழேந்தி, கர்நாடகாவில் தீவிர அரசியல் செய்யவே விரும்புகிறார். தமிழக அரசியலில், அவருக்கு உள்ள ஆதரவு, ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தெரிந்து விட்டது. அங்கு போட்டியிட்ட அவர், மிக குறைந்த ஓட்டுக்களை பெற்று, படுதோல்வி அடைந்தார்.

எனவே, கர்நாடகா அரசியலில் ஈடுபடும் விதமாக, அங்கு ஆட்சி செய்யும், பா.ஜ.,வில் இணைய விரும்புவதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, பா.ஜ., - எம்.பி., ஒருவருடன் அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க, புகழேந்தி விரும்புகிறார். அவரை சந்தித்து, தினகரன் செயல்பாடுகள் பற்றி புகார் கூற திட்டமிட்டு உள்ளார். அதன்பின், தன் முடிவை அறிவிப்பார் என, தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...