Tuesday, September 10, 2019

சார் இதுதான் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையா? ?!!

ஒரு இளைஞன் அழகான பெண் ஒருத்தியை கண்டு அவள் மேல் காதல் கொண்டான். அவள் பெற்றோரிடம் சென்று அவர்கள் சம்மதம் கேட்டான் திருமணம் செய்து கொள்ள..... அவர்களோ விவசாயிகள்... அவள் அப்பா அந்த பையனிடம்... "நான் மூன்று காளை மாடுகளை திறந்து விடுவேன்.. நீ அவற்றில் ஏதாவது ஒன்றின் வாலை தொட்டுவிட்டால் உனக்கு என் மகளை மணம் முடித்து தருகிறேன்" என்றார். அவனும் "சரி" என்று ஒத்துக்கொண்டான்...அவனை வயலின் நடுவில் சென்று நிற்க சொல்லிவிட்டு முதல் காளையை திறந்து விட்டார்.
ஐயோ...அந்த இளைஞன் திடுக்கிட்டான். இதுவரை இவ்வளவு பெரிய காளை மாட்டை அவன் பார்த்ததே இல்லை... பயந்து நடுங்கி... ஓரமாக ஒதுங்கி கொண்டான்.. அடுத்த காளை வரட்டும் என்று.. அந்த விவசாயியும் அடுத்த காளையை திறந்து விட்டார். அடப்பாவமே.. அது முதல் காளையை விட பெரிதாக இருந்தது.. அப்போதும் ஒதுங்கி கொண்டான் அந்த இளைஞன்... சரி அடுத்த காளை வரட்டும் என்று...
இப்போது மூன்றாவது காளை .... இதோ திறந்து விடப்பட்டு வெளியே வந்தது.. அதை பார்த்ததும் மிகவும் சந்தோசப்பட்டான் அவன். இது மிகவும் நோஞ்சானாக இருந்தது... சரி இது தான் நமக்கு ஏற்றது என்று தயாரானான் வாலை பிடிப்பதற்கு.... அந்தோ பரிதாபம்.. அந்த காளைக்கு வாலே இல்லை....
நாமளும் இது போல தான்.... இது வேணாம்... அது வேணாம்னு அடுத்தடுத்து வரும் வாய்ப்புக்களை சாய்ஸ்ல விட்டுட்டு பின்னால அவதிப்படுறோம்....
நம் வாழ்க்கை முழுவதும் வாய்ப்புகள் நிறைந்தது தான். நாம் தான் அவற்றை எதிர்கொள்ள பயந்து அடுத்தடுத்த வாய்ப்புகளை எதிர் நோக்கி கையில் கிடைத்த நல்வாய்ப்புகளை இழந்து விடுகிறோம்...
எனவே... கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நழுவ விடாது அதை பயன்படுத்துதல் தான் புத்திசாலி தனம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...