தமிழர்களின் பாரம்பரிய நெல் ரகமான கறுப்பு கவுனி அரிசியில் இருந்து நுாடுல்ஸ், பாஸ்தா, குக்கீஸ் உட்பட மதிப்பு கூட்டப்பட்ட ஐந்து வகையான உணவு பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் கறுப்பு கவுனி அரிசியிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஐந்து வகையான உணவு பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இது குறித்து உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய நெல் ரகமான கறுப்பு கவுனி அரிசியில் இருந்து செய்யப்பட்ட பாஸ்தா, சேமியா, நுாடுல்ஸ், குக்கீஸ், சிறுதானிய படலம் மற்றும் தேங்காய் பிரட் தயார் செய்யப்பட்டுள்ளன. இது ஓட்சை விட குறைந்த கொழுப்புசத்துகளை உடையது.கறுப்பு கவுனி நெல் ரகம் அழிந்து வரும் நிலையில் உள்ளது. டெல்டா பகுதிகளில் இந்த நெல் சாகுபடியை அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
செப். 15, 16ம் தேதிகளில் நிறுவன வளாகத்தில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சி உணவு பதப்படுத்துதல் இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவை மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன. விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் பொதுமக்கள் 15ம் தேதியும்; பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் 16ம் தேதியும் பார்வையிடலாம். சிறுதானிய ஐஸ்கிரீம், சிறுதானிய பாப்கார்ன், பழச்சாறு மற்றும் குக்கீஸ் மாதிரிகளை பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment