Saturday, September 14, 2019

பார்ப்பது வேதனையாக உள்ளது.

தில்லையில் நடந்திருப்பதை எதை சொல்லியும் நியாயப்படுத்தவே முடியாது.கோவிலின் ராஜசபையான ஆயிரங்கால் மண்டபம் என்பது 3 நட்சத்திர விடுதி போல மாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
பொன்னம்பலத்தை அலங்காரம் செய்ய எப்படி அனுமதி கொடுக்கலாம்? இதென்ன கோவில் விசேஷமா? அதிலும் பொறுப்பே இல்லாமல் அவமானப்படுத்தும் விதமாக கீழே படுத்திருக்கிறார்கள்,எந்த பக்தி உணர்வும் இல்லாமல் ஏறி நிற்கிறார்கள்.பஞ்சாட்சர படியெல்லாம் பொருளிழந்த நிலையில் இருப்பதை பார்ப்பது வேதனையாக உள்ளது.
கோவிலில் திருமணம் நடத்தியதோ,அல்லது வேறேதேனும் சுப நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிப்பதையோ பற்றியல்ல எனது குற்றச்சாட்டு.ஆனால் கோவிலில் நடத்துவதற்கு என முறை கிடையாதா? சினிமா பாட்டை போட ராஜசபையில் எப்படி அனுமதி வழங்கப்பட்டது.எல்லா கோவிலிலும் திருமணம் நடக்கிறது அதற்காக இப்படியா?
சிதம்பரம் சைவத்தின் மணிமகுடம்.ஒரு பழம் கலாச்சாரத்தின் ஆதார பீடம்.இது நிச்சயம் சைவ இந்துக்களின் நெஞ்சில் பாய்த்த வேல்.இதை தீக்ஷிதர்களே செய்திருப்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை.இது நல்ல அறிகுறியல்ல. .😔
பின்குறிப்பு: எந்த பக்தி உணர்வும் இல்லாத,எதையும் கடைபிடிக்காத பிராமண வெறுப்பை மட்டும் மூலதனமாக கொண்டு..நடப்பதை உள்ளூர மகிழ்ந்து நியாயம் சொல்பவர்கள் விலகிச் செல்லலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...