Saturday, September 7, 2019

சில தமிழக ஊடக முட்டாள்கள் மற்றும் அந்த NDTV சைக்கோ இவர்கள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

பல்லவ பகலா என்ற அந்த NDTV நிருபருக்கு தான் எவ்வளவு கோபம், என்னவோ இவரே செயற்கைகோளை தயாரித்து விண்ணில் செலுத்தி கிழித்ததை போல 'எங்கே உன் தலைவர்?' என்று கேள்வி கேட்டிருக்கிறார். உன் தொலைக்காட்சி தலைவனின் லட்சணம் தான் நாடே கைகொட்டி சிரிக்கிறதே? நாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற உங்கள் ndtv தலைவர் Prannoy Roy சிபிஐ மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் ஏன் தடுத்து நிறுத்தப்பட்டார் தெரியுமா? பண மோசடி வழக்கில் இவர் மீது விசாரணை நடந்து வருகிறது, குற்றவாளி என்று சந்தேகப்படும் இந்த நபர் தப்பி ஓடிவிடக்கூடாது என்று தான் தடுத்து நிறுத்தப்பட்டார். உன் தலைவனின் யோக்கியதை இவ்வளவு தான். இப்படிப்பட்ட கீழ்த்தரமான தொலைக்காட்சி நிருபராக இருந்து கொண்டு உனக்கு என்ன இவ்வளவு திமிர்?
நன்றாக புரிந்து கொள்ளுங்கள், ISRO விஞ்ஞானிகள் நீங்கள் 500 ரூபாய் மற்றும் சாராயத்திற்கு ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் இல்லை. அவர்களிடம் உங்கள் சந்தேகங்களை மரியாதையாக கேட்டு தெரிந்து கொள்ளலாம். அவர்களின் செயல்பாடுகளை பற்றி விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் கூட, உங்களுக்கு அவர்கள் தான் தகவல் கொடுத்தாக வேண்டும். Malai Murasu , விஞ்ஞானி கதறல், என்று ஒரு அருவருப்பான பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
உங்களுக்கெல்லாம் விண்வெளி ஆராய்ச்சி பற்றி என்ன தெரியும்? உடனே மிகைத்திறமையாக இப்படி facebook பக்கத்தில் எழுதும் உனக்கு நிறைய தெரியுமா என்று எதிர்கேள்வி எழுப்பிவிட முடியும். ஆமாம் என் போன்றவர்களுக்கு தொழில்நுட்ப நுணுக்கங்கள் தெரியாது தான். ஆனால், இந்த சந்திரயான் பொறுத்தவரை, இஸ்ரோவின் இலக்கு என்ன என்பதும், அதை அடைவதில் எத்தனை தூரம் சென்றிருக்கிறார்கள் என்றும், அவர்கள் கொடுக்கும் தகவல்களை படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு பொறுமை இருக்கிறது. சூடான செய்தி என்று கேவலமாக முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.
நம் தமிழக ஊடகங்களுக்கு ஏன் ISRO மீதெல்லாம் திடீர் ஆர்வம்? வழக்கம் போல, கள்ளக்காதல் காரணமாக கணவன் கொல்லப்பட்டார், இந்த நடிகருக்கும் அந்த நடிகைக்கும் கள்ளத்தொடர்பா போன்ற சூடான செய்திகளையே வெளியிடலாமே?
ஒரு குழுவின் பல ஆண்டுகால உழைப்பை அரைநொடியில் கொச்சைப்படுத்தும் ஒவ்வொருவனும் ஒரு ஈனப்பிறவியே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...