Monday, December 9, 2019

சரிந்தது விலை; வந்திருச்சு இறக்குமதி வெங்காயம் – திருச்சி நிலவரம் இதோ!

நாடு முழுவதும் பெய்த தொடர்மழை காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது அடித்தட்டு மக்களை பெரிதும் பாதித்தது.
நாட்டின் பல்வேறு இடங்களில் வெங்காயத்தை திருடிச் செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. நாடாளுமன்றத்திலும் வெங்காய விலை உயர்வு விவகாரம் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து காணப்பட்டது.
திருச்சியில் ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனையானது.
இதற்கிடையில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தன.
அதன்படி எகிப்து நாட்டில் இருந்து திருச்சிக்கு வெங்காயம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அங்குள்ள வெங்காய மார்க்கெட்டிற்கு 30 டன் பெரிய வெங்காயம் வந்துள்ளது.
இது கிலோ ரூ.120 என மொத்த விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் பெங்களூருவில் இருந்து திருச்சி பழைய பால் பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டிக்கு 150 டன் பெரிய வெங்காயம் வந்து சேர்ந்தது. இங்கு மொத்த விற்பனையாக கிலோ ரூ.60 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது.
மேலும் நாமக்கல், துறையூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து 75 டன் வெங்காயம் திருச்சிக்கு வந்துள்ளது.
இதன்மூலம் வெங்காயத்தின் விலை சற்றே குறைந்து காணப்படுகிறது.
இருப்பினும் பொதுமக்கள் வெங்காயத்தை வாங்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...