Monday, December 9, 2019

கிச்சன்_டிப்ஸ்.


ஆப்பிள், தேன், ரோஜாப்பூ, குங்குமப்பூ ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து லேசான சுடுநீரில் கலந்து தொடர்ந்து உண்டு வந்தால் சுகப்பிரசவம் கிடைக்கும்.
முருங்கை இலையை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டால் இடுப்பு வலி போன்ற வலிகள் குறையும்.
நன்றாக பொடி செய்த லவங்கத்துடன் பனை வெல்லத்தை கலந்து உட்கொண்டால் மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் கடுமையான வயிற்றுவலி குணமாகும்!
கீரை வகைகளை ஒரு துணியால் சுற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். மூன்று, நான்கு நாட்களுக்கு அது புதிது போலவே இருக்கும்.
♥️கொண்டைக்கடலையை ஊற வைக்க மறந்துவிட்டால், கொதிக்கும் வெந்நீரை ஒரு ஹாட்பேக்கில் ஊற்றி அதில் கொண்டைக்கடலையை ஊற வைத்தால் ஒரு மணி நேரத்தில் நன்றாக ஊறி விடும்.
வாழைத்தண்டு பொரியல் சமைக்கும்போது ஒரு ஸ்பூன் பச்சரிசி, ஒரு ஸ்பூன் உளுந்து, நான்கு மிளகு, ஒரு மிளகாய் வற்றல் இவற்றை வறுத்துப்பொடி செய்து தூவி, கிளறி இறக்கினால் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.
காலிஃப்ளவர் வேக வைக்கும்போது அதில் சிறிது பாலை விட்டால், பூவில் உள்ள அழுக்கு, கசடு போன்றவை மேலே வந்துவிடும். அதைச் சுலபமாகக் கரண்டியால் அப்புறப்படுத்தி விடலாம்!
காரப் பொரியலில் காரம் தூக்கலாகி விட்டதா? கவலை வேண்டாம். இரண்டு கசகசாவை மிக்ஸியில் தூளாக்கி காரப் பொரியலில் தூவி விடுங்கள். காரம் போயே போச்சுதான்.
அறுகம்புல்லில் சாறு எடுத்துச் சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடலாம். அந்தச்சாற்றில் தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிகம் உள்ளன.
பாகற்காயை வதக்கும்போது அதில் சிறிது எலுமிச்சைச்சாறு பிழிந்தால் கசப்பு குறைந்து சுவையாக இருக்கும்.
♥️சாம்பாரை அடுப்பில் இருந்து இறக்கிய பின்பு தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை தாளித்து சேர்த்தால் சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.
♥️குலோப் ஜாமூன் செய்துவிட்டு மீதமுள்ள சர்க்கரை பாகில் நெய்யில் பிரெட்டை ரோஸ்ட் செய்து போட்டால் புதுவிதமான ஸ்வீட் தயார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...