தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தமிழக தேர்தல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துஉள்ளது.
தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:உச்ச நீதிமன்றம் தமிழக ஊரக உள்ளட்சி தேர்தல் தொடர்பாக டிச. 6 மற்றும் 12ல் சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.அதில் 1995ம் ஆண்டு தமிழக பஞ்சாயத்து சட்டம் பிரிவு 6ன்படி தேர்தல் நடத்தும் போது மாநில அரசும் தேர்தல் ஆணையமும் அனைத்து தொகுதிகளிலும் விகிதாச்சார முறைப்படி இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தேர்தல் ஆணையர் டிச. 7ல் தமிழக ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அதில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெண்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை.
மாறாக 1991ம்ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பழைய முறையிலேயே இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது.ஆகவே வேண்டுமென்றே உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிச்சாமி தலைமைச் செயலர் கே.சண்முகம் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment