காமராஜரின் ஆதரவாளராக, காங்கிரஸ் அனுதாபியாக, திரைப்பட தயாரிப்பாளராக, பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்ட பழ. கருப்பையாவை 2010 ல் ஜெயலலிதா அதிமுகவில் இணைத்துக் கொண்டார். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்று வெற்றி பெற்றார்.
2016-ஆம் ஆண்டு நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் ஆளும் அதிமுக அமைச்சர்கள் குறித்து விமர்சித்து பேசியதால் உடனே நீக்கப்பட்டார்.
இதற்கடுத்த நாள் அவர் துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவரது வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடந்தது . அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக அரசு ஒரு ஊழல் அரசு என்றார்.
கடந்த 2016 தேர்தலில் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்தார். அ.தி.மு.க கூட்டங்களில் வருவோருக்கு பிரியாணியும் தலைக்கு ரூ 300 தருவதாகவும் பேசினார் .பின்னர்
அவர் திமுகவில் அதே ஆண்டு சேர்ந்து கொண்டார் .
இதையடுத்து பல்வேறு பேட்டிகளில் ரஜினி, கமலை ஆதரித்து அவர் பேசியிருந்தார். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் சொன்னார் . இதனால் அவர் திமுகவிலிருந்து ஓரங்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் திமுகவிலிருந்தும் விலகியுள்ளார். இந்த பழமும் அதன் கொட்டையும் இனி என்ன செய்யும்?

No comments:
Post a Comment