Wednesday, December 11, 2019

காளியா? காமாட்சியா?

ஒரு அம்மாள் பத்து வயது பெண் குழந்தையுடன் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க ஸ்ரீ மடம் அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கினார்.
“கூட்டமில்லாமல் ஸ்ரீ பெரியவா தரிசனம் கிடைக்கணுமே” என்ற படபடப்போடு மடத்துக்குள் நுழையும் போதுதான் கூட வந்த தன் பெண் குழந்தையை காணாதது தெரிந்தது. எங்கோ வழிதவறி போயிருக்க வேண்டும்.
அங்குமிங்கும் தேடி ஓடினாள். எங்கும் காணவில்லை. மன கலவரம் மேலிட ஸ்ரீ பெரியவாளிடம் முறையிட ஓடிவந்தாள்.
சாட்சாத் பரமேஸ்வரர் திருச்செவியில் கேட்டுவிட்டு, தன் கண்ணை மூடி சற்றுநேரம் தியானம் செய்தபடி மௌனம் காத்தார்.
பிறகு “காளிகாம்பாள் கோயிலுக்கு போ…ஒரு சீட்டில் பெண் குழந்தையை காணோம். கண்டுபிடிச்சு சேர்ப்பிக்கணும் தாயேன்னு எழுதி ஒரு ரூபாய் காணிக்கையோடு கோயில் உண்டியலில் போட்டு விட்டு வா” என்றார் ஸ்ரீ பெரியவா.
பதற்றத்துடன் காளி கோயிலுக்கு போய் ஸ்ரீ பெரியவா சொன்னதை செய்துவிட்டு காளி காளி என்ற ஜபத்துடன் அந்த அம்மாள் வர கோயில் வாசலிலேயே அழுதபடி குழந்தை நின்றது. தேம்பி அழுத பெண்ணை அணைத்து, ஆச்சர்யமும் ஆனந்தமாக வந்த அம்மாள் திரும்பவும் ஸ்ரீ பெரியவாளிடம் வந்து நமஸ்கரித்தாள்.
“சீட்டு எழுதி போட்டியோ?” ஸ்ரீ பெரியவா ஒன்றும் தெரியாதவர் போல் நாடகமாடினார்.
“போட்டேன் ஆனால் அங்கே காளிகாம்பாள் மூலஸ்தானத்தில் என் கண்ணுக்கு பெரியவா தான் தென்பட்டா…அது போல இங்கே வந்தா அந்த காளிதான் என் கண்ணுக்கு படறா” என்று அந்த அம்மாள் அந்த திருநாடகத்தை புரிந்தவராய் சொன்னபோது ஸ்ரீ பெரியவாளின் திருமுகத்தில் அதை அங்கீகரிப்பது போல் ஒரு தெய்வீக புன்னகை வெளிப்பட்டது.
இப்படி எல்லாமுமாகி எங்கும் வியாபித்தருளும் குணாநிதியிடம் நாம் கொள்ளும் பூர்ணபக்தி நமக்கெல்லாம் சர்வ மங்களங்களையும், ஐஸ்வர்யங்களையும் அருளுவது நிச்சயம்!
"ஸகலம் கிருஷ்ணார்ப்பணம்"
ஹர ஹர ஸங்கர!
ஜெய ஜெய ஸங்கர!
" காமாஷி கடாட்ஷம்."

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...