Wednesday, December 11, 2019

சமுதாயத்தின் எண்ணமே சட்டமாகும்!

சமீப சில வருடங்களில் நீதி மன்றங்கள் திருமணமாகாத ஆண் பெண்களின் உறவு குறித்து "லிபரலான" கருத்துக்களையும் தீர்ப்புகளையும் வழங்கி வருகின்றன!
"Living together!, unmarried man and woman can stay in a hotelroom" போன்ற பல விஷயங்க காலங்காலமாக அரசல் புரசலாக இருந்தாலும், அவற்றுக்கு நீதி மன்றங்கள் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவதுதான் இப்போதைய புரட்சி டிரெண்ட்!
இது சமுதாயத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மத, கலாசார, நாகரீகத்தின் அடிப்படைகோட்பாடான சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற "திருமணம்" என்னும் சமூகக் கட்டுக்கோப்பான ஒரு பந்தத்தை சீர்குலைக்கும் செயலுக்கு நீதி மன்ற அங்கீகாரம் கொடுக்கும் நிலை ஆரம்பமாகி உள்ளது!
சிலர் சட்டத்தில் இதற்குத் தடை இல்லையே என்றும் சுட்டிக் காட்டுகின்றன!
ஆனால், சமுதாயத்தில் பேச்சு வழக்கில்கூ இதற்குக் "கள்ளை உறவு, Illicit relationship illegal relationship. என்றெல்லாம் வார்த்தைகள் இருக்கின்றன! இந்த உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் "Illegitimatfe children" எனப்படுகின்றன!
மேலும் கல்யாணத்தை சட்ட முறைப்படி பதிய வேண்டும், மனைவி சம்மதம் இல்லாமல் வேறுகல்யாணம் பண்ணினால் சட்டம் தடுக்கிறது!
கணவனின் சொத்து சுகத்தை மனைவி அனுபவிக்க திருமண பந்தத்தால் கிடைத்த திருமணச் சான்றிதழ் அவசியம்!
இப்படி திருமண பந்தத்தின் சட்ட அங்கீகாரத்தை தெளிவு படுத்தியபின் திருமணமில்லா ஆண் பெண் வாழ்க்கை தவறு இல்லை என்றால், இந்த Illicit relationshipல் பிறந்தகுழந்தைகளின் கதியைப் பற்றி யாரும் அக்கரைப் பட்டடமாதிரி தெரியவில்லை! Whether the society is totally unconcerned about such illegitimate children and their future?
சற்றேறக் குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் கண்ணதாசன் Living Together ற்றியும் திருமண பந்தம் பற்றியும் இரண்டு வரியில் எழுதிய ஒரு காதல் பாடலில் நினைவுக்கு வருகிறது!
ஆண்: அன்பில் இரு மனம் இணைந்தபின் திருமணம் ஏனடி ராதா...?
பெண்: அது இயற்கையின் நாடகம் அரங்குக்கு வருவதுராஜா...."
என்ன ஒரு தெளிவு! இயற்கையான ஆண் பெண் அன்பு சமுதாயம் என்னும்அரங்கத்தில் ஊரறிய திருமண பந்தம் ஏற்பட வேண்டும் என அழகாகக் கூறியியிருக்கிறார்!
சமுதாயத்தின் எண்ணமே சட்டமாகும்!
இல்லையெனில் சமுதாயம் தறி கெட்டுப் போய்விடும்!
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...