புதிதாக ஒன்றும் சொல்லவில்லை. ஏற்கனவே, ஜவஹர்லால் நேரு கொண்டு வந்த மசோதாவில் ஒரு சின்னத் #திருத்தம் அவ்வளவு தான்.
பாரதத்தின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் நம் நாட்டில், தொடர்ந்து பதினொரு ஆண்டுகள் குடியிருந்தால், அவர்களுக்கு நம் நாட்டுக் குடியுரிமை உறுதி செய்யப்படும் என்பது நேரு காலத்தில் இயற்றப்பட்ட சட்டம்.
இப்பொழுது 6 #ஆண்டுகள் அப்படி குடியிருந்தால், குடியுரிமை உறுதி செய்யப்படும் என்று மாற்றியிருக்கிறார்கள். அவ்வளவு தான். இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?
இதில் யாரெல்லாம் குடியுரிமைப் பெறத் தகுதியானவர்கள் என்ற பட்டியலில், இந்துக்கள், பார்ஸிகள், சீக்கியர்கள், கிருத்துவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
ஆனால், #இஸ்லாமியர்கள் இல்லை. அதான் இவ்வளவு சர்ச்சை. அண்டை நாடுகளிலிருந்து நிறைய இஸ்லாமியர்கள், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் #குவிந்துள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கி #ஓட்டு வாங்கும் முயற்சியிலிருந்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு இது கசப்பான மசோதா!
#ஏன் இஸ்லாமியர்களைச் சேர்க்கவில்லை? ஏனெனில், இஸ்லாமிய அண்டை நாட்டில் சிறுபான்மையினர்(இந்துக்கள்) படும் துன்பங்களிலிருந்து #விடுதலை பெற்றுக் கொடுப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் (அந்த நாடுகள் இந்தியாவிருந்து பிரிக்கப்பட்டதே இஸ்லாமிய #மத #அடிப்படையில் தான் - அங்கு 28% இருந்த இந்துக்கள் இப்போது 2% தான், இவர்கள் #கொல்லப்பட்டனர் மீதமுள்ளவர்கள் கட்டாய #மதமாற்றம் செய்யப்பட்டார்கள்)!
சிறுபான்மையினர் வாழ உகந்ததாக இல்லாத நாடுகளாகத் தான் அண்டை நாடுகளான பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தானெல்லாம் இருக்கிறது. இஸ்லாமியர்கள் அங்கே பெரும்பான்மையினர். மத அடிப்படையில் துன்பப்படுபவர்களுக்கு #அடைக்கலம் கொடுப்பது தான் இந்தச் சட்டத்தின் நோக்கம். அப்படி இருக்கையில் இஸ்லாமியர்களுக்கும் இந்த வாய்ப்பினை #எப்படி கொடுக்க முடியும்?
இது முழுக்க முழுக்கச் சிறுபான்மையினரின் உயிர் மற்றும் உடைமை காக்கும் சட்டம். இதனை #எதிர்ப்பவர்கள், இங்கே இருக்கும் சிறுபான்மைச் சமூகத்திற்கு மட்டும் வழங்கும் சலுகைகளையும் எதிர்க்கிறார்களா என்று தெளிவுபடுத்தினால் நல்லது.
இந்த சட்டத்திருத்த மசோதா 2015லேயே மக்களவை வாக்கெடுப்பில் #வெற்றி பெற்று விட்டது. அன்றைக்கு ராஜ்யசபாவில் போதிய பலமின்மை காரணமாக கிடப்பில் இருந்த இந்த மசோதாவை தாக்கல் செய்யலாமா என்ற வாக்கெடுப்பில் இன்று தேர்வடைந்துள்ளது.
மக்களவையில் 2015ல் இந்த மசோதாவை ஆதரித்து ஓட்டுப் போட்ட உதவாதாக்ரே, இந்த மசோதா ஹிந்து முஸ்லீம் உறவைப் பாதிக்கும் என்றும் ஓட்டரசியலுக்காக ஹிந்துக்களுக்கு சலுகை செய்கிறது பாஜக என்றும் அறிக்கை விட்டிருப்பது தான் சீரியஸ் படத்தில் செம்ம காமெடி. சிவ சேனா #சவ சேனாவாகி விட்டது என்பதற்கு மற்றுமொரு சாட்சி.
இனி இந்த மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் பண்ணினால் எதிர்த்துப் பேசக் கூட ஆள் வராது. அந்தளவுக்கு இன்னிக்கே #அமித்ஷா நெஞ்சைத் தூக்கி விரட்டிய விரட்டில் காங்கிரஸ் எம்.பிகளின் சீட்டுக்கடியில் பூராம் ஈரமாக இருந்ததாக பார்லிமெண்ட் ஹௌஸ் கீப்பிங் டீம் கிசுகிசுத்தனர்.
No comments:
Post a Comment