Wednesday, December 11, 2019

' வாழ்க்கையைப் புரிந்து நடக்க வேண்டும்.

நீங்கள் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்..
நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும், நம் வயிறுக்கு எவ்வளவு சாப்பிட முடியுமோ, அவ்வளவு தான் சாப்பிட முடியும். அதன் கொள்ளளவு அப்படித் தான்...
நீங்கள் எவ்வளவு ஓடியும், வாழ்க்கை எதற்காக வாழ்கின்றோம் என்று அறியாமல் மரணிக்கின்றோமே அதை விடக் கொடுமை ஒன்று இருக்க முடியாது.
நாம் எவ்வளவு பெரிய வசதி படைத்தவராக இருந்தாலும், நாம் உண்பதும், உடுத்துவதும்் மட்டும் தான் நாம்.. சம்பாதித்ததில் அனுபவித்தது. மற்றவை அடுத்தவர்களுக்குத் தான்.
நாம் எல்லோரும் ஏதோ காரணமாகத் தான் உழைக்கிறோம் ; ஓடியாடி சம்பாதிக்கிறோம். ஆனால், அந்தக் காரணம் பிற்காலத்தில் வெற்றுக் காரணம் ஆகி விடுகிறது
நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்.. பிற்காலத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம். நம் பிள்ளைகள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். என்றெல்லாம் எண்ணி உழைக்கிறோம்..
சம்பாதித்தது போதும் ஓய்வெடுக்கலாம் என்று எண்ணுகிற போது உடல் நலம் கெட்டு இருக்கும்..
பிள்ளைகள் வசதி வாய்ப்புகளைப் பெற்று விட்டு ஒதுங்கி விடுவார்கள்.
வேறு சிலர் தேவைக்கு அதிகமாக ஆசைப்பட்டு அதற்காக உழைப்பார்கள்.
அம்முயற்சிகளில் தோல்வியுற்று வாழ்க்கையைத் தொலைப்பார்கள்.
நீங்கள் சற்று நிதானமாக உட்கார்ந்து, நன்றாக மூச்சை இழுத்து விட்டு, சுவையாகப் போட்ட இஞ்சி டீயை் ஒரு மடக்கு அருந்திக் கொண்டு, வாழ்வின் யதார்த்தத்தை நினைத்துப் பாருங்கள்,
எத்தனையோ கோடி மக்கள் வந்து போன இந்த உலகத்திற்கு நாமும் வந்து இருக்கின்றோம். ஆனால் நமக்கு முன்பு வந்தவர்களை நினைத்துப் பாருங்கள்?
அவர்கள் வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து,உண்ர்ந்து, வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவித்து , நிம்மதியாகக் கண் மூடி போய் விட்டார்கள்..
ஆனால் நம்மால் ஒவ்வொரு இரவும் நிம்மதியாக உறங்கக் கூட முடியவில்லையே, ஏன்?
வாழ்க்கை ( life style) அப்படியே மாறி விட்டது.இதற்குக் காரணம் இது இன்றைய சூழ்ச்சியாளர்களின் சூச்சம் என்பது தான் உண்மை..
ஆனால் நாம் தான் இன்னும் உணர்ந்த பாடு இல்லை அதை உணரும் போது நாம் இங்கே இருக்கப் போவது இல்லை.
ஆம்.,
வாழும் போதே முழுமையான கவனத்துடன் நமது வாழ்க்கையைத் துவங்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும், ஏன் ஒவ்வொரு நிமிடத்தையும், நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தீர்மானிப்பது நீங்கள் தான்.
விழிப்புணர்வோடு வாழ்க்கையை அணுகுங்கள்.
நன்றாகச் சிந்தித்து, வாழ்வின் யதார்தத்தை புரிந்து, ஆனந்தமாக வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள்.......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...