Wednesday, December 2, 2020

எப்படியெல்லாம் தமிழானது சமஸ்கிருதத்துக்கு மாறியிருக்கிறது!

 குடமுழுக்கை - கும்பாபிஷேகமாக்கி,

அருள்மிகுவை - ஶ்ரீ ஆக்கி,
கருவறையை - கர்ப்பகிரகமாக்கி,
நீரை - ஜலமாக்கி,
தண்ணீரைத் - தீர்த்தமாக்கி,
குளியலை - ஸ்நானமாக்கி,
அன்பளிப்பை - தட்சணையாக்கி,
வணக்கத்தை - நமஸ்காரமாக்கி,
ஐயாவை - ஜீயாக்கி,
நிலத்தை - பூலோகமாக்கி,
வேண்டுதலை - ஜெபமாக்கி,
தீயை - அக்னியாக்கி,
குண்டத்தை - யாகமாக்கி,
காற்றை - வாயுவாக்கி,
விண்ணை - ஆகாயமாக்கி,
பூவை - புஷ்பமாக்கி,
தொழுதலை - பூஜையாக்கி,
முறைகளை - ஆச்சாரமாக்கி,
படையலை - நைவய்தியமாக்கி,
திருமணத்தை - விவாகமாக்கி,
பிணத்தை - சவமாக்கி,
மக்களை - ஜனங்களாக்கி,
உணர்வற்றதை - சடமாக்கி,
ஒன்பதாம் நாளை - நவமியாக்கி,
பத்தாம் நாளை - தசமியாக்கி,
பிறந்தநாளை - ஜெயந்தியாக்கி,
பருவமடைதலை - ருதுவாக்கி,
ஆசானைக் - குருவாக்கி,
மாணவனை - சிஷ்யனாக்கி,
பள்ளிகளை - வித்யாலயமாக்கி,
அவையை - சபையாக்கி,
கலையை - சாஸ்திரமாக்கி,
ஆடையை - வஸ்திரமாக்கி,
அழகை - சுந்தராக்கி,
முகத்தை - வதனமாக்கி,
முடியை - கேசமாக்கி,
உறக்கத்தை - நித்திரையாக்கி,
உண்மையை - சத்தியமாக்கி,
நல்லதை - புண்ணியமாக்கி,
கெட்டதை - பாவமாக்கி,
கொடையை - தர்மமாக்கி,
அமிழ்தை - அமிர்தமாக்கி,
நஞ்சை - விஷமாக்கி,
சான்றை - ஆதாரமாக்கி,
பெரியதை - மஹாவாக்கி,
செருப்பை - பாதரட்ஷையாக்கி,
திருவிழாவை - உற்சவமாக்கி,
பயணத்தை - யாத்திரையாக்கி,
உலகத்தை - லோகமாக்கி.,
இப்படி -
அழகு தமிழ்ச் சொற்கள்
மாற்றப்படுகின்றன.
தமிழ் மொழியைப் பேணுவோம்..
முடிந்த வரை மேற்கண்ட தமிழ் சொற்களையே பயன்படுத்துவோம்.
தமிழ் வாழ்க!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...