புலவர் ஔவையார் போன்ற ஞானி வேறெந்த நாட்டிலும் இருந்ததில்லை. அவரது ஒவ்வொரு நூலும் ஒரு பொக்கிஷம். அவரது நூல்களில் ஒன்று ஆத்திச்சூடி.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Saturday, January 30, 2021
மூதாட்டி ஔவையார்.
திமுக மீண்டும் வேண்டவே வேண்டாம்.
கடந்த திமுக ஆட்சியில் நாங்கள் இத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம்..என்று சொல்லி ஸ்டாலின் எங்கேயாவது பிரச்சாரம் செய்கிறாரா..?
வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட உதவும் கல் உப்பு பரிகாரம்..
ஒரு வீட்டில் எதிர்மறையான விஷங்கள் நிகழ்ந்தால், அந்த வீட்டில் பல பிரச்சனைகள் நிகழும். அனைத்து பிரச்சனைகளும் தீர இந்த எளிமையான கல் உப்பு பரிகாரம் செய்தாலே போதும் அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடிவிடும்.
பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை, பணம் கிடைப்பதற்கு தாமதம், பணம் வந்தும் பற்றாக்குறை போன்றவை. ஜாதக கிரக நிலைகளுக்கு அப்பாற்பட்டு, வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் காரணமாக, வீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்பட்டிற்கும் கண் திருஷ்டி, மேலும் கணவன் மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வெளியில் கிளம்பும்போது, ஏற்படும் குடும்ப கண் திருஷ்டி, சில குடுபங்களில் மாதம் ஒருமுறையாவது மருத்துவமனைக்கு செல்வது போன்ற விஷயங்களால், குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த அனைத்து பிரச்சனைகளும் தீர இந்த எளிமையான கல் உப்பு பரிகாரம் செய்தாலே போதும் அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடிவிடும்.
இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யவேண்டும். அப்போதுதான் பலன்கள் அதிகமாக கிடைக்கும். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, ஒரு எலுமிச்சை பழத்தை கல் உப்பின் நடுவில் நிற்க வைக்கவேண்டும்.
பிறகு நான்கு காய்ந்த மிளகாயை அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் சொருக வேண்டும்.
மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனை தலைவாசல் கதவின் உட்புற பகுதியின் மூலையில் வைக்கவேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றவேண்டும். அவ்வாறு மாற்றும்போது அந்த மூன்று பொருட்களையும் (கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய்) ஓடும் நீரில் விட்டுவிடலாம் அல்லது மூன்று பொருட்களையும் சேகரித்து யார் காலிலும் படாதவாறு போட்டுவிடவேண்டும்.
இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கலாம்.
பணத்தில் குளிக்கும் மத வியாபாரிகள்!
அண்மையில், இரண்டு செய்திகள், நடுநிலையாளர்களின் மனதை அதிர்ச்சியடைய செய்தன. ஒன்று, ஆந்திராவில் நடைபெற்ற, சிறு கோவில்கள் மற்றும் மசூதிகள் மீதான தாக்குதல். மற்றொன்று, தமிழகத்தில், கிறிஸ்துவ மத போதகர் ஒருவரின் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை; அதைத் தொடர்ந்து வெளியான, அந்த மத போதகர் செய்த, பல நுாறு கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்திகள்.இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத செய்திகள் போல தோன்றினாலும், இரண்டுக்கும் ஒற்றுமை உண்டு. இரண்டுமே மத மாற்றம் தொடர்பானவை. கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த இவர்கள், அப்பாவி ஹிந்துக்களையும், ஹிந்து கோவில்களையும் குறி வைத்து தாக்கி, அழிக்க முயன்றுஉள்ளனர்.
தாயை போன்றது
அன்பை மட்டுமே போதித்த இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி, ஒரு கும்பல், கோவில்களை உடைத்து தள்ளியுள்ளது. இன்னொரு கும்பல், ஏழைகளிடம் இரக்கமாக பேசி, பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிஉள்ளது.மதங்கள் பற்றிய பல்வேறு கருத்துகள், உலகெங்கும் இருந்தாலும், ஹிந்து மதத்தில் இல்லாத கருத்தை, எந்த மதத்திலும் சொல்லி விட முடிவதில்லை.இன்னும் சொல்லப் போனால், ஹிந்து மதத்தில் இருக்கும் எளிமையும், அரவணைப்பும், மற்ற மதங்களில் கிடைப்பதில்லை. கடவுளே இல்லை என்னும் நாத்திகத்தைக் கூட, தன்னில் ஒரு பிரிவாக ஏற்றுக் கொண்ட தாயை போன்றது, ஹிந்து மதம். 'என்னை கடவுளாக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்; இல்லாவிட்டால் உன்னை நரகத்தில் போட்டு, காலம் முழுக்க துன்புறுத்துவேன்' என்று, மக்களைப் பயமுறுத்துவதும் இல்லை.
ஆலய வருகையை கட்டாயம் ஆக்காமல், 'உள்ளமே கோவில்; ஊனுடம்பே ஆலயம்' என்ற உயர்ந்த சிந்தனை கொண்டது ஹிந்து மதம்.மேலும், கோவிலுக்கு சென்று தான் வழிபட வேண்டும் என்று இல்லாமல், 'கோபுர தரிசனம் கூட, கோடி புண்ணியம் தரும்' என்ற எளிய வழிபாட்டு முறையை கொண்டது ஹிந்து மதம்.
துடிக்கின்றனர்
ஆனால், இந்த ஹிந்து மதத்தை குறி வைத்து, பிற மதங்களை சேர்ந்த சிலர் நடத்தி வரும் தாக்குதல்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், இந்த தேசத்துக்கும், மனிதர்களுக்கும், இன்னும் என்னென்ன சோதனைகள் வருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.பொருளாதாரத்தில் தவிக்கும் ஏழைகளை, மனக்குழப்பத்தில் இருக்கும் மனிதர்களை, தங்களின் மதத்தில் சேர்ப்பதில் இவர்கள் காட்டும் அக்கறை, அதற்காக இவர்கள் எத்தனை துாரம் கீழிறங்கிப் போகின்றனர் என்பதை காணும் போது, அச்சமாக இருக்கிறது.
மக்களின் பொருளாதார சூழ்நிலை, குடும்ப கஷ்டம், வியாதி போன்றவற்றில் அவதிப்படுபவர்களிடம் சென்று, ஆறுதலாக பேசி, அவர்களை மதம் மாற்ற முயற்சிக்கின்றனர். ஹிந்துவாக ஒருவர் இருக்கும் வரை தான், அவரிடம் தாராள எண்ணம், சகிப்புத்தன்மை போன்றவை இருக்கும். மதம் மாறி விட்டால், அவ்வளவு தான்; அத்தனையும் போய் விடும். மதம் மட்டும் தான் முன் நிற்கும்.
ஒருவரை மதம் மாற்றி விட்டால், அவரின் வாரிசுகள், வழிவழி வரும் தலைமுறைகள், மாறிய மதத்திலேயே இருப்பர் என்பதால், எப்பாடு பட்டேனும், மதம் மாற்ற பலர் துடிக்கின்றனர். சிறுவயதில் படித்த கதை ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஒரு சிறுவன் இறந்து விட்டான். அவனின் தாய், புத்த பிரானிடம் வந்து, தன் மகனை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும் என, கேட்கிறார்.
கீழ்த்தரமான செயல்
அவளிடம், அப்படி செய்ய முடியாது; செய்தால், உலகில் மக்கள்தொகை பெருகி விடும் என, சொல்லி புரிய வைக்க விரும்பாத புத்தபிரான், 'உன் மகனை உயிர்ப்பிக்கிறேன். அதற்காக, நான் சொல்வதை செய். 'இறப்பு நிகழாத வீட்டில் இருந்து, ஒரு படி கடுகு வாங்கி வா; உன் மகனை உயிர்பித்து தருகிறேன்' என்பார்.அந்த சிறுவனின் தாயும், ஒவ்வொரு வீடாக சென்று கேட்பார். இறப்பு நிகழாத வீடே இல்லை என்பதை புரிந்து கொள்வார். தனக்கு இந்த உண்மையை புரிய வைத்த புத்தருக்கு நன்றி கூறுவார்.அது போல, துன்பம் இல்லாத வீடே இல்லை. அப்படி இருக்க, மக்களின் துயரத்தை, பணக்கஷ்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அவர்களை மதம் மாற்ற நினைப்பது, எவ்வளவு கீழ்த்தரமான செயல்... 'முடவர்கள் நடக்கின்றனர்; செவிடர்கள் கேட்கின்றனர்; ஊமைகள் பேசுகின்றனர்' என்பதோடு, ஒரு, 'சிடி'யை வைத்தால் புற்றுநோயும், கிட்னி பிரச்னையும் சரியாவதாக சொல்லி, சிலர் மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால், இவர்கள் நிச்சயமாக தங்களுக்கு ஏற்படும் நோயை சரிசெய்ய, பிரார்த்தனை செய்ய மாட்டார்கள்; நல்ல மருத்துவர்களையே நாடுவர். இந்த மாதிரி ஆட்கள் பற்றி, படித்த ஒரு செய்தியை, இங்கு பகிர விரும்புகிறேன். ஒரு குடும்பத்தில் உள்ள சிறுவனுக்கு, உடல் நலம் சரியில்லை.
அவர்கள் வீட்டுக்கு வரும் மத போதகர், 'மருத்துவரிடம் செல்ல வேண்டாம்; பிரார்த்தனை மூலம் சரியாகி விடும்' என்று, தினமும் பிரார்த்தனை செய்ய வருகிறார்.பல நாட்கள் கழித்தும், நோய் குணமாகவில்லை. அந்த சிறுவன், தன் தாயிடம், 'அம்மா நமக்கு, 'பிரேயர்' பண்ண வரும் அங்கிள், தனக்கு பிரேயர் பண்ண மாட்டாரா... அவருக்கு கண்ணு தெரியலைன்னு, கண்ணாடி போட்டு இருக்கிறாரே; பிரேயர் மூலம் அவரால் அதை சரிசெய்ய முடியவில்லையா' என்ற அவனின் கேள்வி, தாயின் மனதை மாற்றுகிறது.
அந்த போலி மதப்போதகர், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்பவர் என்ற உண்மைத் தெரிய வருகிறது. அதன் பின், அந்த சிறுவனை, டாக்டரிடம் கூட்டிச் செல்கின்றனர். 'பிரேயர் மூலம் இறந்தவர் உயிர் பிழைப்பார்' என, இறை வணக்கம் செய்து கொண்டிருந்த பெண் காவலர் பற்றிய செய்தியை நம்மில் பலர், சமீபத்தில் படித்திருக்கலாம். இறந்த பிறகும் உயிர் வரும் என்று சடலத்தை அழுக வைத்தது, அந்த பெண் காவலரின் அறியாமையின் உச்சம். இன்று, இவர்கள் பரப்ப நினைக்கும் மதத்தை பெருமளவு பின்பற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், வறுமை தாண்டவம் ஆடுகிறது.
சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்காமல், மணலை ரொட்டி மாதிரி தட்டி, நெருப்பில் சுட்டுத்தின்னும் காட்சியை பார்த்தப் போது, மனது பதைபதைத்தது.மதம் மாற்றுவதற்காக, இந்தியா போன்ற நாடுகளில், பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்யும் சில கிறிஸ்துவ அமைப்புகள், ஆப்ரிக்க மக்களின் பசியை போக்க முயற்சி செய்தால், இயேசு உண்மையிலேயே சந்தோஷப்படுவாரே! இந்தியாவில், யாரும், எந்த மதத்திற்கும் மாறிக்கொள்ளும் உரிமை, தனிமனிதனுக்கு உள்ளது; ஆயினும், எந்த மனிதனும் புறத்துாண்டுதல் இல்லாமல் மதம் மாற துணிவதில்லை.
மன்னிக்க மாட்டார்
மதம் மாறுவதால் என்ன ஆபத்து வந்து விடப் போகிறது என நினைக்கிறீர்களா... ஒரு சாதாரண நபரின் மதமாற்றம், ஒரு நாட்டையே இரண்டாக பிரிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை, உங்களால் நம்ப முடிகிறதா... பூஞ்ஜா கோகுல்தாஸ் மெக்ஜி எனும் குஜராத் ஹிந்து, தன் காதலுக்காக, முஸ்லிமாக மதம் மாறினார். அவரது பேரன் தான், முகமது அலி ஜின்னா. பாகிஸ்தான் நிறுவனர்; இந்தியாவையே இரண்டாக பிரித்தவர்.பிரவீன் சக்கரவர்த்தி என்ற ஆந்திர நபர், தன்னை, கிறிஸ்துவ சாமியார் என சொல்லி, பல கோடி ரூபாயை வெளிநாடுகளில் இருந்து பெற்று, மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதும், ஒரு கட்டத்தில், கோவில், கோவிலாக அவரும், அவரது ஆதரவாளர்களும் உடைப்பதும், ரகசிய நடவடிக்கையில் அம்பலமாகின.
பணத்திற்காக, பிற மத கடவுள் சிலைகளை அவர்கள் எட்டி உதைக்கும் காட்சிகளை பார்த்தால், மனம் மிகவும் வேதனைப் படும். ஹிந்துவாக இருந்த வரை, அவர்களிடம் இருந்த மத சகிப்புத்தன்மை எங்கோ போய் விட்டது. பூமியில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தான், பறவைகளையும், விலங்குகளையும், கடவுள்களின் வாகனங்களாகவும், மரங்களை கோவிலின் தலவிருட்சங்களாகவும் உருவகப்படுத்தி பாதுகாத்தனர், ஹிந்துக்கள்.
ஆனால், இன்றோ, யானையின் காதில் எரியும் டயரை போட்டும், சாப்பிடும் பழத்தில் வெடியை வைத்தும் கொல்லும் வக்கிர மனது உள்ளவர்களாக மனிதர்கள் மாறி விட்டனர். மனிதர்கள் மனதில் சகிப்பைத்தன்மையும், மனிதத்தையும் விதைக்கும் போது, மதங்கள் பொருட்டாக இருக்கப் போவதில்லை.ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு, புதிய மதத்தை எப்படியும் புகுத்தி விட முடியும் என முயற்சிப்பது, விழலுக்கு இறைத்த நீர் தான் என்பதை, புரியாமல் இருக்கும் அவர்களை, அவர்களின் கடவுள் கூட மன்னிக்க மாட்டார்.
அப்படியே இருந்தாலும், இவர்களிடம் குவிந்து கிடக்கும் பணம், இவர்களை மட்டுமல்லாமல் நாட்டின் நலத்தையும், வளத்தையும் சீரழிக்கும் வல்லமை மிக்கது. ஏழைகளிடம் உண்டியல் குலுக்கி, அவர்கள் கொடுத்த, 50, 100 பணத்தால், பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை துவக்க, இவர்களால் எப்படித் தான் மனம் வந்ததோ...ஏழைகள் பணம், ஏழைகளுக்குத் தானே செலவழிக்கப்பட வேண்டும். அந்த பணத்தை வைத்து, ஊர்களை விலைக்கு வாங்கி, ஊர்களின் பெயர்களை மாற்றி, எங்கும் எதிலும், 'காருண்யம்' தெரிய வேண்டும் என நினைத்த ஈன மனதை, அந்தஇயேசு நாதரே மன்னிக்க மாட்டார்.
சட்டப்படி குற்றம்
இறைபணி செய்பவர்கள் என, கூறிக் கொள்ளும் இவர்களுக்கு ஏன் இவ்வளவு பணம்... எதற்கு இவ்வளவு சொத்து... இவ்வளவு பணத்தை சேர்ப்பதற்காகத் தான், ஒவ்வோர் எழுப்புதல் கூட்டங்களிலும் அழுது, புரண்டு, நடித்து, அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனரா?எனவே, சட்ட விரோதமாக சம்பாதித்தவர்கள் மற்றும் மத மாற்ற நடவடிக்கைகளில் ரகசியமாக ஈடுபடும் நபர்களுக்கு, தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களை குடும்பத்துடன் சிறைக்கு அனுப்ப வேண்டும். 20 - 30 ஆண்டுகளுக்கு முன், ஒன்றிரண்டு மோசடி கும்பல்கள் தான், இந்த இழி செயலில் இறங்கி இருந்தன.
ஆனால், இப்போது பல நுாறு மத நிறுவனங்கள், ஏழைகளை ஏமாற்றி, சொகுசு கட்டடங்கள் கட்டி, இறை வணக்கம் என்ற பெயரில், நாட்டின் தலைமைக்கு எதிராக, அப்பாவி மக்களை துாண்டி விட்டு, பல ஆயிரம் கோடி ரூபாயில் துவங்கப்பட்ட தொழில் நிறுவனங்களை கூட பூட்ட வைத்து, நகரங்களை வறண்ட பாலைவனங்களாக மாற்றி வருகின்றன.இவர்கள், தாமாக திருந்த மாட்டார்கள். மோசடித்தனமாக சேர்த்த பணத்தில் குவித்த சொத்துகளை மொத்தமாக அரசுடமை ஆக்கி, அந்த நபர்களை சிறைக்கு அனுப்பி, மோசடித்தனங்களை, இனிமேல் யாரும் செய்ய விடாமல் செய்ய வேண்டும்.அவரவர் மதங்கள் அவரவர் உரிமை. மதம் மாற்ற முயற்சிப்பதும், மனதை குழப்பி, பயமுறுத்தி மாற வைப்பதும் சட்டப்படி குற்றம். அரசுகள் இத்தகைய மோசடியாளர்கள் விஷயத்தில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, தேசத்தின் இப்போதைய அவசர தேவை!
அப்படின்னா இந்த ஜென்மத்தில மணிமண்டபம் கிடையாது...😄
அம்மாவுக்கு மணிமண்டபம் கட்டி தொறந்தாச்சு, கருணாநிதிக்கு ஏன் திமுக அதை செய்யலைன்னு சில போஸ்டுகள் பார்க்க நேர்ந்தது...
இந்து சாஸ்திர முறைகளே பின்பற்றுவோம்.!
தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி.
தை அமாவாசை ஸ்பெஷல் !
#திருக்கடையூர்_ரகசியம்
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...