மும்மூர்த்திகளில் ஒருவராக சிவபெருமானுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல சிவாலயங்கள் உள்ளன. பழமை வாய்ந்த ஒவ்வொரு சிவன் கோயிலும் ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றன.விலை உயர்ந்த ரத்தினங்களில் மரகதம் ஒன்று. அப்படிப்பட்ட மரகத கல்லினால் செய்யப்பட்ட சிவ லிங்கம் உள்ள சில கோயில்கள் உள்ளன.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, January 11, 2021
*மரகத லிங்கத்தின் சிறப்புகள் என்ன?* தமிழகத்தில் மரகத லிங்கம் உள்ள கோயில்கள் விபரம்:
மும்மூர்த்திகளில் ஒருவராக சிவபெருமானுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல சிவாலயங்கள் உள்ளன. பழமை வாய்ந்த ஒவ்வொரு சிவன் கோயிலும் ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றன.
விலை உயர்ந்த ரத்தினங்களில் மரகதம் ஒன்று. அப்படிப்பட்ட மரகத கல்லினால் செய்யப்பட்ட சிவ லிங்கம் உள்ள சில கோயில்கள் உள்ளன.
*மரக லிங்கத்தின் சிறப்பு*
நவகிரகத்தில் இளவரசன் என அழைக்கப்படுவது புதன் பகவான். புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை நாம் வழிபாடு செய்வதால் நாம் கேட்ட வரம் தருவார் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.
சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷன் சக்தி உண்டு. அப்படி புதனுக்கு உகந்த மரகத லிங்கத்தை நாம் வணங்கி வர நம் மனக்குறைகள் நீங்கி நாம் நினைத்த வரத்தைப் பெறலாம்.
மரக லிங்கத்தை வழிபட்டு வர ஆரோக்கியம், கல்வி, பெரிய பதவி, அரசருக்கு அடுத்த பதவியைத் தரக்கூடிய யோகத்தைப் பெறலாம். அதோடு நம்முடைய தொழில், வியாபாரம் விருத்தி அடையவும், உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த உயரத்தை அடைய வணங்கலாம்.
இத்தனையும் தாண்டி, நாம் மரகத லிங்கத்தை வணங்கி வர நம்முடைய சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் பெறலாம்.
இந்திரன் அளித்த 7 மரகத லிங்கம் அமைந்துள்ள திருக்கோயில்கள் :
*சப்த விடங்க தலங்கள்*
சோழ சக்கரவர்த்தி முசுகுந்தா (12 ஆம் நூற்றாண்டு) கடும் தவம் செய்து ஏழு மரகத சிவலிங்கங்களை, தேவர்களின் அரசன் இந்திரனிடமிருந்து பெற்றான்.
அந்த விலைமதிக்க முடியாத மரகதலிங்கங்களை வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல்,
திருவாரூர்,
திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர்
ஆகிய ஏழு இடங்களில் மக்கள் வழிபாட்டிற்காக சிவ ஆலயங்களில் (சப்த விடங்க தலங்கள்) அமைத்து திருக்கோயில் எழுப்பினார்.
1) *திருஇடைச்சுரம்*
திருஇடைச்சுரம் எனப்படும் திருவடிசூலம். ஞானபுரீஸ்வரர் கோயில் செங்கல்பட்டில் மாவட்டத்தில் கிழக்கே திருப்போரூர் செல்லும் வழியில் சுமார் 9 கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஊர் முன்பு இடைச்சுரம் என்று அழைக்கப்பட்டது.
இங்குள்ள சுயம்பு மரகத லிங்கத்திற்கு கற்பூர ஆரத்தி காட்டும் போது தீப ஒளி லிங்கத்தின் மீது பட்டு கண்ணாடி போல மின்னுவதைப் பார்க்க முடியும். புற்றுருவாக இருந்த இந்த சுவாமி மீது, அம்பிகை பசுவாக வந்து பால் பொழிந்த சிறப்பு வாய்ந்த ஆலயம் இதுவாகும்.
சிறுகரும்பூர் காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்
சிறுகரும்பூர் காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்
2) *சிறுகரும்பூர் காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்*
வேலூர் மாவட்டம் காவிரிபாக்கம், சிறுகரும்பூரில் அமைந்துள்ளது சுந்தர காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் கோயில். இங்கு இருந்த மரகத லிங்கம் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்தது. இது அண்மையில் திருடு போனது.
3) *மரகதாசலேசுவரர் கோவில் திருஈங்கோய்மலை:*
திருச்சி அருகே திருஈங்கோய்மலையில் அமைந்துள்ளது மரகதாசலேசுவரர் கோயில். மரகதாசலேசுவரர் என்ற பெயருக்கேற்றார் போல மரகத கல்லால் ஆன பச்சை நிறத்தில் பளபளப்பாக லிங்கம் அமைந்திருக்கிறது.
4) *நஞ்சுண்டேஸ்வரர் கோவில், நஞ்சுங்குட் மைசூர்*
கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டட்தில் நஞ்சுங்குட் இடத்தில் அமைந்துள்ளது நஞ்சுண்டேஸ்வரர் கோவில்.
திப்பு சுல்தானின் பட்டத்து யானை குருடானது. அவரது அமைச்சரின் ஆலோசனைப்படி, 48 நாட்கள் விரதமிருந்து நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு தினமும் பூஜை செய்து வழிபட்டார். இதனால் அந்த யானை இழந்த பார்வை திரும்ப பெற்றது. அதனால் மகிழ்ச்சி அடைந்த மன்னர் திப்பு சுல்தான் இந்த கோயிலுக்கு மரகத லிங்கத்தை அன்பளிப்பாக அளித்து பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.
5) *மரகதாசலேசுவரர் கோவில் திருஈங்கோய்மலை:*
திருச்சி அருகே திருஈங்கோய்மலையில் அமைந்துள்ளது மரகதாசலேசுவரர் கோயில். மரகதாசலேசுவரர் என்ற பெயருக்கேற்றார் போல மரகத கல்லால் ஆன பச்சை நிறத்தில் பளபளப்பாக லிங்கம் அமைந்திருக்கிறது.
6) *உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களேசுவரி உடனுறை மங்களநாத சுவாமி கோவில்
இராமநாதபுரம் மாவட்டத்தில், உத்தரகோசமங்கையில் அமைந்துள்ளது மங்களேசுவரி சமேத மங்களநாத சுவாமி கோவில். இந்த கோயில் வளாகத்தில் நடராஜருக்கு என தனி சன்னதி உள்ளது.
இந்த நடராஜர் சிலை முழுவதும் மிகவும் விலை உயர்ந்த பச்சை மரகதக்கல்லால் ஆனது. இந்த நடராஜருக்கு மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ர அபிஷேகத்தின் போது மட்டும் சந்தன காப்பு களையப்பட்டு, அபிஷேகம் செய்து, மீண்டும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கோயிலில் ஒரு மரகத லிங்கம், ஸ்படிக லிங்கம் உள்ளது. இதற்கு தினமும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
7) *சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்:*
திருவாள்ளூர் மாவட்டத்தில், சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் சிறுவாபுரியில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவகிரகம் தவிர மற்ற சுவாமி சிலைகள் பச்சைக்கல்லினால் செய்யப்பட்டவை. கொடிமரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் மையில் சிலையும் மரகத பச்சையில் இருக்கிறது.
கோயிலின் தெற்கு மூலையில் மகரகத கல் சூரியனார் சிலை, அதற்கு நேர் எதிரில் ராஜகணபதியாக மரகத விநாயகர் அருள்பாலிக்கிறார். இப்படி மற்ற கோயிலில் இல்லாத அளவிற்கு அதிக பச்சை கல்லினால் செய்யப்பட்ட பல சிலைகள் காணப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment