Wednesday, January 20, 2021

இவருக்கு நவரசநாயகன் என்கின்ற பட்டபெயரும் உண்டு.

 நடிகர் முத்துராமன் தஞ்சாவூரில் ஓரத்தநாடு தாலுக்காவில் அட்வகேட் ராதாகிருஷ்ணன் தம்பதியர்க்கு மகனாக

1929 ல் பிறந்தார்
அவர் ஒரு வழக்கறிஞரின் மகன். அவரது மாமா ஒரு போலீஸ் அதிகாரி. இருப்பினும் அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது
குடும்பத்திலுள்ளவர்களின் விருப்பத்துக்காக முதலில் அவர் அரசாங்க ஊழியர் ஆனார்.
எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்திக்கொண்டிருந்த சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் அறிமுகமான நடிகர். புராண, சமூகக் கதைகளுக்கெல்லாம் பொருத்தமான நடிகர் முத்துராமன்.
தமிழ் சினிமாவின் ஒரு மறக்க முடியாத நடிகர் என்பவர் முத்துராமன். அவருடைய நடிப்பில் ஆர்ப்பாட்டம் இருக்காது. ஆனால் ஆழமிருக்கும். அவருக்கு கொடுத்த பாத்திரத்திற்கு உயிரூட்டுவார்.
கர்ணன்’ படத்தில் அந்த அர்ஜுனன் வேடத்திற்கு வேறொருவர் பொருத்தமாக இருப்பாரா என்பது சந்தேகம்தான்.
`கர்ணன்’ என்றால் எப்படி சிவாஜி நினைவிற்கு வருமோ, அதே போல் அர்ஜுனன் என்றால் நினைவுக்கு வருபவர் முத்துராமன்தான்.
`திருவிளையாடல்’ படத்திற்கு பிறகு பாண்டிய மன்னன் என்றால் முத்துராமன் நினைவுதான் வரும்.
`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் அவருடைய கதாபாத்திரம் உள்ளத்தை உருக வைத்த பாத்திரம்.
சில பாடல்களைக் கேட்கும்போது முத்துராமன் முகம் உடனே நினைவிற்கு வரும்.
அதில் முக்கியமான பாடல் `நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை.’
`எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் – என்பது யாருக்கும் தெரியாது’
இந்த வரிகளைக் கேட்கும்போது கண்ணதாசனும், முத்துராமனும்தான் மனதில் வந்து அலைமோதுவார்கள்.
`காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை’ என்று சீர்காழி குரல் ஒலிக்கும்போது முத்துராமனின் ஆர்ப்பாட்டமான ஆர்ப்பரிப்பு கண்முன்னே வரும்.
`மவுனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்’ என்று பிபிஎஸ் குரல் ஒலித்தால், முத்துராமனின் சாந்தமான முகம் நினைவுக்கு வரும்.
`காலம் நமக்கு தோழன்! காற்றும் மழையும்’ என்று டி.எம்.எஸ்., உச்சஸ்தாயியில் பாடினால் முத்துராமனின் ஏழைத் தந்தை முகம் வந்து போகும்.
`சேதி கேட்டோ, சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ’ என்று எஸ்.சி. கிருஷ்ணன் பாடினால் அதில் முத்துராமனின் ஆர்ப்பரிப்பு எதிரொலிக்கும்.
`சம்சாரம் என்பது வீணை, சந்தோஷம் என்பது ராகம்’ என்று எஸ்.பி.பி., குரலெழுப்பினால் அமைதியான சாந்தமான கணவன் முத்துராமன் வந்து போவார்.
`பகை கொண்ட உள்ளம் துயரத்தில் இல்லம் தீராத கோபம் யாருக்கும் லாபம்’ என்று ஜேசுதாஸ் உருகினால் கிராமத்தான் முத்துராமன் நடந்து போவார்.
ஸ்ரீதரின் கொடிமலர் திரையில் அவரின் நடிப்பு நம்கண்முன்னே நிற்கும்
வசன உச்சரிப்பு அத்தனை தெளிவாக இருக்கும். எல்லா பிரதான கதாநாயகர்கள் குறிப்பாக மக்கள் திலகம், நடிகர் திலகம் இருவருக்குமே பிடித்தமான நடிகர். அவரைப் பற்றி எந்தவித கிசுகிசுக்களோ, சர்ச்சைகளோ வந்ததேயில்லை.
அக்காலத்திய முன்னணி இயக்குனர்களான ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றிலும் இவர் நடித்துள்ளார்.
முன்னணிக் கதாநாயகனாக பல படங்களில் நடித்தபோதும், தன்னை முன்னிறுத்தாத, கதாநாயகியை முன்னிறுத்தும் பல படங்களில் (கே.ஆர்.விஜயா, சுஜாதா ஆகியோருடன்) நடித்ததுள்ளார்.
மேலும், அப்போதைய முன்னணி நட்சத்திரங்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர் (‘என் அண்ணன்’, ‘கண்ணன் என் காதலன்’ போன்றவை) மற்றும் சிவாஜி கணேசன் (‘பார் மகளே பார்’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘சிவந்த மண்’ போன்றவை) ஆகியோருடன் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்
தனது காலத்தில் அல்லது தனக்குப்பின் அறிமுகமான ஜெய்சங்கர் (கனிமுத்துப் பாப்பா), ரவிச்சந்திரன் (‘காதலிக்க நேரமில்லை’) ஏவி. எம். ராஜன் (‘பதிலுக்குப் பதில்’, ‘கொடிமலர்’) ஆகியோருடன் இரண்டாவது நாயகனாகவும் நடித்துள்ளார். தனது திரைப்படங்கள் பலவற்றிலும் மிகைப்படுத்தாத தன்னம்பிக்கை மிகுந்த நடிப்பிற்காகப் பெயர் பெற்றார்.
இவருக்கு நவரசநாயகன் என்கின்ற பட்டபெயரும் உண்டு
அவர் தேவிகா மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட பல கதாநாயகிகளுடன் ஜோடியாக நடித்தார், நடிகை காஞ்சனாவுடன். பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்தார், காதலிக்க நேரமில்லை திரைப்படங்களில் இணை-ஹீரோ பாத்திரங்களில் நடித்தார் மற்றும் சர்வர்சுந்திரம் போன்ற திரைப்படங்களில்
பிரபலமானார்
முத்துராமன் சுலோச்சனாவை மணந்தார். தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர், அவர்களில் இளையவர் கார்த்திக் முத்துராமன், பிரபல நடிகர்ஆவார் முத்துராமனின் மகனான கார்த்திக் ஒரு பிரபல தமிழ் நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். அவரது பேரன் கௌதம் கார்த்திக் ஒரு நடிகர்ஆவார்
`இவரது இறுதிப்படம் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த போக்கிரி ராஜாவாகும். இதில் வில்லன் வேடம் ஏற்றிருந்த முத்துராமன்,
வெளிப்புறப்படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அச்சமயமே, இவரது மகனான கார்த்திக் கதாநாயகனாக பாரதிராஜா வின் புகழ்பெற்ற அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மறையவில்லை! பலரின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Image may contain: 1 person, closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...