Saturday, January 16, 2021

🙏திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் ஏன் குரு ஸ்தலமாக பார்க்கப்படுகிறது தெரிந்து கொள்வோமா🙏

 முருகப் பெருமான் சுப்பிரமணிய ஸ்வாமியாக அருள்பாலிக்கும் திருச்செந்தூர் திருக்கோயில் குரு ஸ்தலமாகவும் பார்க்கப்படுகின்றது. குரு பகவான் தொடர்பான பரிகார தலமாகவும் கூறப்படுகின்றது.

பல அதீதி சக்திகளைப் பெற்ற சூரன் மண்ணுலகத்தினருக்கு மட்டுமல்லாமல், விண்ணுலகத்தினருக்கும் பல்வேறு தொல்லைகளை கொடுத்து வந்தான். அவர்களை முருகப்பெருமான் போரிட கிளம்பிய இடம் தான் திருச்செந்தூர்.
போரிடச்செல்லும் முன் அசுரர்களைப் பற்றிய வரலாறை குரு பகவான் முருகனிடம் விளக்கிய தலமாக திருச்செந்தூர் விளங்குகின்றது.
அதன் காரணமாக திருச்செந்தூர் பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட யானைகள், அஷ்ட நாகங்கள், மேதா மலை என 4 ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கின்றார். அவருக்கு பின்னர் இருக்கும் கல்லால் மரத்தில் கிளி வடிவில் வேதங்கள் உள்ளன.
இதன் காரணமாக திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குரு பகவானால் ஏற்படக்கூடிய சிக்கலிலிருந்து தப்பிக்கக்கூடிய பரிகார தலமாக விளங்குகின்றது.
அது மட்டுமில்லாமல் இங்கு முருகன் ‘ஞான குரு’வாக அருள்புரிகின்றார்.
குருவின் விளக்கத்தால் முருகப் பெருமான் சூரர்களிடம் போரிட்டு சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் ஆகியோரை சம்ஹாரம் செய்து அவர்களை தம் பக்தர்களாக ஆட்கொண்டார். அதோடு அவர்களை சேவல் மற்றும் மயிலாக மாற்றி தன்னுடனே இருக்க அருள் புரிந்தார்.
பகைவருக்கு அருள் புரியும் முருகப்பெருமானை வணங்கி நல்லருள் பெற்று வாழ்வில் வளம்பெறுவோம்...
🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...